வளர்ச்சி திட்டங்கள் குறித்து ஆய்வுக் கூட்டம்: அமைச்சர் நேரு - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 17 பிப்ரவரி, 2025

வளர்ச்சி திட்டங்கள் குறித்து ஆய்வுக் கூட்டம்: அமைச்சர் நேரு

 


வளர்ச்சி திட்டங்கள் குறித்து ஆய்வுக் கூட்டம்: அமைச்சர் நேரு தலைமையில் நடைபெற்றது.



11  மாவட்டங்களுக்கு உட்பட்ட மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் செயல் படுத்துப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் ,நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் 
கே.என்.நேரு தலைமையில்
நடைபெற்றது.

மதுரை மாநகராட்சி, தமுக்கம் மாநாட்டு மையத்தில் மாண்புமிகு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு  தலைமையில்  மதுரை, திண்டுக்கல், தேனி, கருர், இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 11 மாவட்டங்களுக்கு உட்பட்ட மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் செயல் படுத்துப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்
கூட்டம் நடைபெற்றது. 
வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.
ராமச்சந்திரன், நிதி மற்றும் சுற்றுசூழல் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ,   சமூக நலம் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன்,  மீன்வளம் மீனவர் நலத்துறை அமைச்சர்   அனிதா ராதாகிருஷ்ணன்,
உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி,   மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி,
வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


இந்நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி (தூத்துக்குடி) வெங்கடேசன் (மதுரை)  தங்கதமிழ்ச்செல்வன் (தேனி) ராணி ஸ்ரீகுமார் (தென்காசி), ராபர்ட் புரூஸ் (திருநெல்வேலி), அரசு முதன்மைச் செயலாளர் கார்த்திகேயன், நகராட்சி நிர்வாக இயக்குனர் சிவராசு, மதிப்பிற்குரிய மேயர்  இந்திராணி பொன்வசந்த் ,மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சௌ.சங்கீதா,  மாநகராட்சி ஆணையாளர்
சித்ரா விஜயன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் கிரண் குராலா,  மற்றும் 11 மாவட்டத்தை சார்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி மேயர்கள், ஆணையாளர்கள், மண்டல நகராட்சி நிர்வாக ஆணையர்கள், நகராட்சி ஆணையர்கள், நகர்மன்ற தலைவர்கள், பேரூராட்சித் தலைவர்கள், செயல் அலுவலர்கள், தலைமை பொறியாளர்கள், பேருராட்சி அலுவலர்கள் ஆகியோர்  கலந்து கொண்டனர். 


நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர்  பேசியதாவது  :
  

தமிழ்நாடு முதலமைச்சர்
நகராட்சி நிருவாகத் துறையின் மூலம் வளர்ச்சித் திட்டப் பணிகளை மேற்கொள்வதற்காக ஒவ்வொரு ஆண்டும் 24 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்து வருகிறார்கள். இந்த ஆண்டு ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆய்வு செய்து தேவைக்கேற்ப புதிய திட்டப் பணிகளை செயல்படுத்திடவும், தற்போது நடைபெற்று வரும் பணிகளை விரைவாக முடிப்பதற்கும் மாவட்டவாரியாக ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் மதுரை தமுக்கம் மாநாட்டு மையத்தில் 11 மாவட்டங்களில் நகராட்சி நிருவாகத்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் இன்று  நடத்தப்படுகிறது.


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான இந்த திராவிட மாடல் அரசு கடந்த மூன்று ஆண்டு காலங்களில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் மக்கள் நலனுக்காக பல்வேறு திட்டப் பணிகளை செயல்படுத்தி உள்ளது. வரி வசூல் தொடர்பான நடவடிக்கைகளில் தமிழ்நாடு அரசு வழங்கியுள்ள வழிகாட்டுதலின்படி மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும்.  எவ்வித பாரபட்சமும் இருத்தல் கூடாது.


தமிழ்நாட்டில் உள்ள 134 நகராட்சிகள் மற்றும் 24 மாநகராட்சிகளில் கடந்த நான்கு வருடங்களில் கலைஞர் நகர்ப்புர மேம்பாட்டு திட்டம், சீர்மிகு நகரத் திட்டம், மூலதன மானிய நிதி, அம்ருட் 2.0, தூய்மை இந்தியா திட்டம் 2.0, நமக்கு நாமே திட்டம் (நகர்ப்புரம்), நகர்ப்புர சாலை மேம்பாட்டு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் மூலமும் ஆசிய வளர்ச்சி வங்கி, உலக வங்கி மற்றும் ஜெர்மானிய வங்கியின் நிதியின் மூலமும் மொத்தம் ரூ.29084 கோடி மதிப்பீட்டில் பேருந்து நிலையங்கள், சந்தைகள், அறிவுசார் மையங்கள், சாலைகள், பூங்காக்கள், நீர்நிலை மேம்பாடு, குடிநீர்வசதி, பாதாள சாக்கடை வசதி போன்ற பல உட்கட்டமைப்பு பணிகள் அனுமதிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றன.


மதுரை மண்டலம், திருநெல்வேலி மண்டலம்  மற்றும் கரூர் மாவட்டத்தில் உள்ள 43 நகராட்சிகள் மற்றும் 8 மாநகராட்சிகளில் கலைஞர் நகர்ப்புர மேம்பாட்டு திட்டம், மூலதன மானிய நிதி, அம்ருட் 2.0, தூய்மை இந்தியா திட்டம் 2.0, நமக்கு நாமே திட்டம் (நகர்ப்புரம்), நகர்ப்புர சாலை மேம்பாட்டு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் மூலம் மொத்தம் ரூ.7822 கோடி மதிப்பீட்டில் பேருந்து நிலையங்கள், சந்தைகள், அறிவுசார் மையங்கள், சாலைகள், பூங்காக்கள், நீர்நிலை மேம்பாடு, குடிநீர் வசதி, பாதாள சாக்கடை வசதி போன்ற பல உட்கட்டமைப்பு பணிகள் அனுமதிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றன.


சாலை மேம்பாட்டு பணிகளுக்கு முக்கியத்துவம் வழங்கி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முன்னேற்றத்தில் உள்ள சாலை திட்டப் பணிகள், பாதாள சாக்கடை திட்டப்பணிகளை விரைந்து நிறைவேற்றி  பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.  பாதாள சாக்கடை பணிகள் முடிந்தபிறகு உடனடியாக சம்பந்தப்பட்ட சாலை சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும்.  
தமிழ்நாடு முழுவதும் கடந்த ஆண்டு 5.50 லட்சம் எல்.இ.டி. தெருவிளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் விடுப்பட்ட பகுதிகளில் அமைப்பதற்கு கூடுதலாக 1.50 லட்சம் எல்.இ.டி.விளக்குகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புதிய பேருந்து நிலையங்கள், மின்மயானங்கள், அங்காடிகள்,  அறிவுசார் மையங்கள் அமைப்பது தொடர்பாக பல்வேறு கோரிக்கைகள் வரப்பெற்று உள்ளது. கோரிக்கைகள் அனைத்தும் ஆய்வு செய்து பொதுமக்களின் தேவைக்கேற்ப முன்னுரிமை அடிப்படையில் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 
கடந்த மூன்று ஆண்டு காலங்களில்  திண்டுக்கல் மாவட்டத்திற்கு குடிநீர் திட்டத்திற்கு ரூ.1446.12 கோடியும், கரூர் மாவட்டத்திற்கு ரூ.522.04 கோடியும், மதுரை மாவட்டத்திற்கு ரூ.2008.70 கோடியும்,  விருதுநகர் மாவட்டத்திற்கு ரூ.2027.40 கோடியும், பாதாள சாக்கடை திட்டத்திற்கு ரூ.596.84 கோடியும், தேனி மாவட்டத்திற்கு  ரூ.780.89 கோடியும், பாதாள சாக்கடை திட்டத்திற்கு ரூ.41.72 கோடியும்,  சிவகங்கை ரூ.1952.73 கோடியும், பாதாள சாக்கடை திட்டத்திற்காக ரூ.140.13 கோடியும்,  இராமநாதபுரம் மாவட்டத்திற்கு ரூ.3289.28 குடிநீருக்காகவும், பாதாள சாக்கடை திட்டத்திற்கு ரூ.52.60 கோடியும், திருநெல்வேலி மாவட்டத்திற்கு ரூ.1450.22 கோடியும், தென்காசி மாவட்டத்திற்கு ரூ.226.59 கோடியும்,  தூத்துக்குடி மாவட்டத்திற்கு ரூ.572.54 கோடியும், பாதாள சாக்கடை திட்டத்திற்காக ரூ.368.52 கோடியும், கன்னியாகுமரி மாவட்டத்திற்கு குடிநீர் திட்டத்திற்கு ரூ.508.22 கோடியும்,  பாதாள சாக்கடை திட்டத்திற்காக ரூ.129.95 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு  பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் கொண்டு வரப்பட்டுள்ள அரிய திட்டப் பணிகளை ஆணையாளர்கள், செயல் அலுவலர்கள் மற்றும் அனைத்து அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்றி பணிகளை முடித்து விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அனைத்து வளர்ச்சித் திட்டப் பணிகளை நிறைவேற்றி அரசிற்கு பொது மக்களிடம் நற்பெயரை பெற்றுத் தர வேண்டும் என,  நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு   தெரிவித்தார். 


முன்னதாக,  மதுரை மாநகராட்சி பகுதிகளுக்கு உட்பட்ட வார்டு எண்.49ல் தயிர் மார்க்கெட்டில்  ரூ.1.53 கோடி மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கடைகள், மேலமடை பகுதியில் ரூ.2.00 கோடி  மதிப்பீட்டில்  புதிதாக நவீன எரிவாயு மின் மயானம், கொடிக்குளம் பகுதியில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் துணை சுகாதார நிலையம், கொடிக்குளம் ஆரம்ப சுகாதார நிலையம் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடம், பொன்முடியார் உயர்நிலைப்பள்ளி ரூ.31 லட்சம் மதிப்பீட்டில் பொது கழிப்பறைகள், ஜம்புரோபுரம் மார்க்கெட் ரூ.31  லட்சம் மதிப்பீட்டில் பொது கழிப்பறை,  தல்லாகுளம் மேல தெருவில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் சமுதாய கழிப்பறைகள் என  மொத்தம் ரூ..5.30 கோடி மதிப்பீட்டில் மதுரை மாநகராட்சியில் முடிவுற்ற திட்டப்பணிகளையும், 
மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சி கலைஞர்  நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தினசரி சந்தை கடைகள் ரூ.1.85 கோடி மதிப்பீட்டிலும்,  தேனி மாவட்டம் கம்பம் முகைதீன் ஆண்டவர்புரம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நான்கு வகுப்பறைகள் மற்றும் கழிப்பறைகள் ரூ.95 லட்சம் மதிப்பீட்டிலும், கம்பம் நகராட்சி சுங்கம் நடுநிலைப்பள்ளி மற்றும் தொடக்கப் பள்ளியில் புதிய நான்கு வகுப்பறைகள் மற்றும் கழிப்பறைகள் ரூ.86 லட்சம் மதிப்பீட்டிலும், கள்ளர் மேல்நிலைப்பள்ளியில் புதிய நான்கு வகுப்பறை கட்டிடங்கள் ரூ.68 லட்சம் மதிப்பீட்டிலும், சின்னமனூர் நகராட்சி பொன்னகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள அறிவுசார்மையம் கட்டிடம் ரூ.2.06 கோடி மதிப்பீட்டிலும், கூடலூர் நகராட்சியில் புதிய பேருந்து நிலையம் ரூ.2.30 கோடி மதிப்பீட்டிலும் என மொத்தம் ரூ.8.70 கோடி மதிப்பீட்டில் பல்வேறு முடிவுற்ற திட்டப்பணிகளை ,
அமைச்சர் அவர்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்கள். 
மேலும், தேனி அல்லிநகரம் நகராட்சியில் மேற்குச் சந்தை வளாகத்தில் தினசரி கடைகள் ரூ.8.17 கோடி மதிப்பீட்டிலும்,  தேனி அல்லிநகரம் நகராட்சி காமராஜ் பேருந்து முனைய வளாகத்தில் இராஜ வாய்க்கால் சீரமைத்தல் சிறுபாலங்கள் ரூ.2.26 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப்பணிகளுக்கு மாண்புமிகு அமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டினார்கள்.


இந்நிகழ்வில் ,
துணை ஆணையாளர்கள் சிவக்குமார், ஜெய்னு லாப்தீன், தலைமை பொறியாளர் ரூபன் சுரேஷ், உதவி ஆணையாளர்கள் பிரபாகரன், கோபு, மணியன். செயற்பொறியாளர் (திட்டம்) மாலதி, செய்தித்துறை இணை இயக்குநர் ம.வெற்றிச்
செல்வன், மக்கள் தொடர்பு அலுவலர்கள் சாலிதளபதி, மகேஸ்வரன், உதவி நகர்நல அலுவலர் மரு.அபிஷேக், செயற்
பொறியாளர்கள், உதவிசெயற் பொறியாளர்கள், உதவிப் பொறியாளர்கள், மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad