குடியாத்தம் தாலுக்கா அலுவலக நுழைவு வாயிலில் கிராம உதவியாளர்கள் சங்கம் சார்பில் தமிழக அரச கவன ஈர்ப்பு காத்திருப்பு போராட்டம்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 5 பிப்ரவரி, 2025

குடியாத்தம் தாலுக்கா அலுவலக நுழைவு வாயிலில் கிராம உதவியாளர்கள் சங்கம் சார்பில் தமிழக அரச கவன ஈர்ப்பு காத்திருப்பு போராட்டம்!



குடியாத்தம், பிப் 5 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுக்கா அலுவலக நுழைவாயில் முன்பு நேற்று மாலை கிராம உதவியாளர்கள் சங்கம் சார்பில்  தமிழக அரச கவன ஈர்ப்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் .
இதற்கு வட்டத் தலைவர்  பிரகாசம் தலைமை தாங்கினார் இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் துரைராஜ் பங்கேற்று பேசினார்
இதில் கிராம உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் கருணை அடிப்படை யில் வழங்கப்பட்ட வேலையை மீண்டும் வழங்க வழங்க வேண்டும் ,கடந்த 2007ஆம் ஆண்டுக்குப் பிறகு பணி நிறைவு பெற்று  உதவியாளர்களிடம் பிடித்தம்  தொகையை வழங்க கோரியும்
புதியதாக பணியில் சேர்ந்த கிராம உதவியாளருக்கு சிபிஎஸ்  தற்காலிகமாக வழங்கப்பட்டு , ஊதியம் வழங்கப் படுகிறது எனவே சிபிஎஸ் என் நிரந்தரமாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட  கோரிக்கைகளை  வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்
இது குறித்து குடியாத்தம் ஆர்டிஓ சுபலட்சுமி விசாரணை செய்து வருவதாக தகவல் தெரிவித்தனர். 

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad