ஸ்ரீவைகுண்டம் - நத்தம் கோவிலில் கொடியேற்றம். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 22 பிப்ரவரி, 2025

ஸ்ரீவைகுண்டம் - நத்தம் கோவிலில் கொடியேற்றம்.

ஸ்ரீவைகுண்டம் - நத்தம் கோவிலில் கொடியேற்றம். 

ஸ்ரீவைகுண்டம், பிப்ரவரி 22 நவதிருப்பதி கோவில்களில் இரண்டாவது கோயில் நத்தம். நத்தம் கோவிலில் மாசி பிரம்மோத்ஸவத்தை முன்னிட்டு இன்று கொடியேற்றம் நடந்தது. 

நேற்று காலை 7 மணிக்கு விஸ்வரூபம் 8 மணிக்கு திருமஞ்சனம். திருவாராதனம். பின்னர் 10 .35 மணிக்கு உற்சவர் எம்இடர்கடிவான் தாயார் களுடன் கருடன் சன்னதி முன் எழுந்தருளினார். பின்னர் 

கொடி பட்டம் பூஜை நடந்தது. 11.00 மணிக்கு கொடிப்பட்டம் மாட வீதி சுற்றி வந்தது. 11.40 மணிக்கு அர்ச்சகர் ராஜகோபாலன் கொடியேற்றினார். 

 திருவிழாவை முன்னிட்டு தினசரி மாலை 6.30 மணிக்கு ஹம்ஸ வாகனம் . சிம்ம வாகனம். ஹனுமன் வாகனம். சேஷ வாகனம். கருட வாகனம். யானை வாகனம். சந்திரபிரபை வாகனம். பரங்கி நாற்காலி. குதிரை வாகனம் வெற்றி வேர் சப்பரம் ஆகிய வாகனங்களில் வீதி உலா நடைபெறும். 

 பின்னர் சடாரி பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. மாலை 6 மணிக்கு சாயரட்சை. 6-30 மணிக்கு எம் இடர் கடிவான் வாகன குறட்டிற்கு எழுந்தருளி அர்ச்சகர்கள் கோவிந்தன் கண்ணன். ராஜகோபாலன் வாகனத்தில் அலங்காரம் செய்திருந்தனர். வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். 

இந்நிகழ்வில் ஸ்தலத்தார்கள் ராஜப்பா வெங்கடாச்சாரி. சீனிவாசன். கண்ணன். நிர்வாக அதிகாரி கோவல மணிகண்டன் ஆய்வாளர் முருகன் அறங்காவலர் குழுத் தலைவர் அருணாதேவி கொம்பையா உறுப்பினர்கள் மாரியம்மாள் சண்முகசுந்தரம் முருகன். 

முத்துகிருஷ்ணன் பாலகிருஷ்ணன். தி மு க பிரதிநிதிகள் அருண் கிருஷ்ணன். காசி சண்முகம்.ஆகியோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad