நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் *எக்ஸல் வணிகவியல் மற்றும் அறிவியல் கல்லூரி - பெண்கள் மேம்பாட்டு குழுமம், குமாரபாளையம் தளிர்விடும் பாரதம் அறக்கட்டளை* இணைந்து பவானி தாலுகா ஊராட்சி கோட்டை, தொட்டிபாளையம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கிராம பகுதிகளில் பெண்களின் மேம்பாட்டிற்கான சட்ட விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.
இந்த முகாமில் இளம் வயது திருமணங்கள் தடுக்கப்படுவதின் அவசியத்தையும், அவற்றினால் ஏற்படும் விளைவுகளையும் *வழக்கறிஞர் திருமதி.திலோத்தமா* விரிவாக எடுத்துரைத்தார். மேலும் அவர் பேசும் பொழுது, பெண் கல்வியின் முக்கியத்துவம் மற்றும் அதன் மூலம் அந்த குடும்பத்தில் ஏற்படும் முன்னேற்றத்தையும் தெளிவாக எடுத்துரைத்தார்.
விழாவில் முன்னிலை வகித்து பேசிய *தளிர்விடும் பாரதம் அறக்கட்டளையின் தலைவர் சீனிவாசன்* அவர்கள் பேசும் பொழுது,
பெண்கள் தற்போது அனைத்து துறைகளிலும் ஆண்களுக்கு நிகராக சாதித்து வருகிறார்கள் என்றும் அதை பெண்கள் அனைவரும் முன்மாதிரியாக எடுத்துக் கொள்ள வேண்டும் என கூறினார்.
இந்த முகாமில் 50க்கும் மேற்பட்ட கிராமப்புற பெண்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர். இந்த நிகழ்வில் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
*நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை பேராசிரியைகள் திருமதி.இ.திபேஸ்வரி, சகுந்தலா, அம்பிகா, நந்தினி, தாமரைசெல்வி, பவித்ரா, ஆகியோர் செய்து இருந்தனர்.*
விழாவின் முடிவில் *செயலர் முனைவர் ப.இந்திராணி அவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.*




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக