பரிதாபம்..பாம்பு கடித்து பெண் பலி : - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 7 பிப்ரவரி, 2025

பரிதாபம்..பாம்பு கடித்து பெண் பலி :


ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த ஆரியப்பம்பாளையம், ராமையா தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மனைவி கண்ணம்மாள் (45). பழனிச்சாமி விவசாயம் செய்து வருகிறார்.

அவரது தோட்டத்தில் மாங்காய் மரம் உள்ளது. சம்பவத்தன்று அந்த மாங்காய் மரத்தில் உள்ள மாங்காயை கண்ணம்மாள் பறிக்க சென்றுள்ளார். மாங்காய் பறிக்கும் போது அதில் ஒரு மாங்காய் அருகே உள்ள புதருக்குள் விழுந்து விட்டது. உடனே கண்ணம்மாள் அந்த புதருக்குள் கையை விட்டு மாங்காயை எடுக்க முயன்றார்.

அப்போது அவரைப் பாம்பு கடித்து விட்டது. அவரது அலறல் சத்தத்தை கேட்டு அருகே தோட்டத்தில் வேலை செய்தவர்கள் ஓடிவந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் கண்ணம்மாள் அனுமதிக்கப்பட்டார்.

எனினும் சிகிச்சை பலனின்றி கண்ணம்மாள் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து சத்தியமங்கலம்

போலீசார் வழக்கு பதிவு செய்து

விசாரணை நடத்தி வருகின்றனர்.


தமிழக குரல் இணையதள செய்தியாளர் அண்ணாதுரை, அந்தியூர் தாலுக்கா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad