பல மணி நேரம் காத்திருந்த கர்ப்பிணி பெண்கள் சுமார் 150 கர்ப்பிணிப் பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 7 மார்ச், 2025

பல மணி நேரம் காத்திருந்த கர்ப்பிணி பெண்கள் சுமார் 150 கர்ப்பிணிப் பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி !

சுமார் 150 கர்ப்பிணிப் பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி  

காட்பாடி , மார்ச் 7 -
வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா, தாராபடவேடு, சித்தூர் பேருந்து நிலையம் அருகேயுள்ள தனியார் திருமண மண்டபத்தில், காட்பாடி தாலுகாவிற் குட்பட்ட சுமார் 150 கர்ப்பிணிப் பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
 இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் துரைமுருகன், அவரது மனைவி சாந்தகுமாரி, அவரது மகன் வேலூரில் கதிர் ஆனந்த், கதிர் ஆனந்த் மனைவி சங்கீதா கதிரவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, சுமார் 150 கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் காலை 8 மணி முதல் காத்திருப்பது கர்ப்பிணி பெண்கள் என்று கூட அறியாத, மாவட்ட நிர்வாகம், மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்ட அரசு மாவட்ட உயர்பதவி ஊழியர் செல்வி சாந்தி பிரியதர்ஷினி அமைச்சரின் மனைவி மற்றும் எம்.பி.யின் மனைவி ஆகியோரை மட்டும் விழுந்து விழுந்து கவனித்து மதிய வேலை 12:30 மணி வரை கர்ப்பிணிப் பெண்களை காக்க வைத்திருந்த அவல சூழல் அங்கிருந்த கர்ப்பிணி பெண்களின் நிலை சோர்வடைந்து முகத்தில் சோர்வு காணப்பட்டு முகம் சுளிக்க வைத்தது என்று இப்பகுதி பெண்கள் மற்றும் பெண் சமூக ஆர்வலர்கள் அதிருப்தியடைந்தனர்.
இதுபோன்று கர்ப்ப காலங்களில் அதுவும் வேலூர் மாவட்டத்தில் வெயில் வாட்டி வரும் சூழ்நிலையில் கர்ப்பிணி பெண்களை  இதுபோன்ற நிகழ்ச்சியில் பொதுமக்களின் நலன் கருதி காலம் தாமதம் இல்லாமல் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யவும் நிகழ்ச்சிகளில் நிறைவு செய்யவும்.  மாவட்ட நிர்வாகம், மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி அலுவலகங்களுக்கு சமுக ஆர்வலர் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. 

வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ் 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad