சென்னையில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் 'சேவா ரத்னா விருது' பெற்ற மானாமதுரை நகராட்சி 25வது வார்டு நகர் மன்ற உறுப்பினர்.
சென்னை வடபழனியில் மஹா பைன் ஆர்ட்ஸ் மற்றும் கலையின் குரல் மாத இதழ் இணைந்து பல்வேறு துறைகளில் சாதனையாளர் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் வாழ்க்கையில் உழைப்பால் உயர்ந்து பல்வேறு சமூக பணிகளில் ஈடுபட்டு, பொதுமக்களுக்கும் நலிந்த பிரிவினருக்கும் உதவிடும் வகையில் சேவை ஆற்றி வருபவர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. அந்த வகையில் சிறப்பாக செயலாற்றி வரும் மக்கள் சேவை ஆளுமை சாதனைப் பெண்களுக்கான விருது சிவகங்கை மாவட்டம் மானாமதுரை 25வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் திருமதி எம். நாகஜோதி மணிகண்டன் ஆகியோருக்கு 'சேவா ரத்னா விருது' மாண்புமிகு உயர்திரு சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி திரு எஸ். கே. கிருஷ்ணன் மற்றும் பசுமை இந்தியா துணைத் தலைவர் டாக்டர் திருமதி மாலினி ஜெயச்சந்திரன் ஆகியோர் இணைந்து வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது. மேலும் சேவா ரத்னா விருது பெற்ற நகர் மன்ற உறுப்பினர் திருமதி எம். நாகஜோதி மற்றும் மணிகண்டன் ஆகியோருக்கு மானாமதுரையை சேர்ந்த கட்சி பிரமுகர்கள், வார்டு மற்றும் ஊர் பொதுமக்கள் தங்கள் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக