45 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து கன்னியாகுமரி போக்குவரத்துக் காவல்துறை நடவடிக்கை - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 7 மார்ச், 2025

45 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து கன்னியாகுமரி போக்குவரத்துக் காவல்துறை நடவடிக்கை


ராஜாக்கமங்கலம் கல்லுகட்டி பகுதியில் ஓட்டுனர் உரிமம் இல்லாமலும் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அதிக ஒலி எழுப்பும் சைலன்ஸர் பொருத்திய வாகனங்கள் ஓட்டிய  45 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து கன்னியாகுமரி போக்குவரத்துக் காவல்துறை நடவடிக்கை


கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.ஸ்டாலின் உத்தரவுப்படி காவல்துறை காவல் துணை கண்காணிப்பாளர்.மகேஷ் குமார்  கன்னியாகுமரி அவர்களின் மேற்பார்வையில் கன்னியாகுமரி போக்குவரத்து காவல் ஆய்வாளர்  அருண் போக்குவரத்து உதவி ஆய்வாளர்  ஜெயபிரகாஷ் மற்றும் போக்குவரத்து காவலர்கள் ராஜாக்கமங்கலம் கல்லுகட்டி ஆறுதெங்கன்விளை பகுதியில்   வாகன தணிக்கையின் போது  ஓட்டுநர் உரிமம் இன்றியும், நம்பர் பலகை இல்லாமலும், அதிக ஒலி எழுப்பும் சைலன்சர் பொருத்திய மற்றும் அதிவேகமாக ஆபத்தான முறையில் தகுந்த ஆவணங்கள் இன்றியும் ஓட்டி வந்த  45 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர். பின்னர் ஓட்டுநர் உரிமம் இன்றி வாகனம் ஓட்டிய ஓட்டுநர்களுக்கு அபராதம்   விதிக்கப்பட்டும் நம்பர் பலகை இல்லாத இருசக்கர வாகனங்களுக்கு உரிய  நம்பர் பலகை பொருத்தபட்டும் அதிக ஒழி எழுப்பும் சைலன்ஸர்கள் அகற்றப்பட்டும் பின்னர் வாகன ஓட்டிகளின் பெற்றோர்கள் வரவழைக்கபட்டுதக்க அறிவுரைகள் வழங்கி அனுப்பபட்டது.


கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர், என்.சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad