கோவில் நிதியிலிருந்து 6 லட்சம் செலவில் கட்டப்பட்ட கழிப்பறை குமரி மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவர் பிரபா ஜி ராமகிருஷ்ணன் தலைமையில் திறப்பு
நாகர்கோவில் வடிவீஸ்வரம் அழகம்மன் திருக்கோயிலில் திருக்கோயில் நிதி ரூ. 6 லட்சம் செலவில் அடிப்படை வசதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் புதிய கழிப்பறை ரூ 6 லட்சம் செலவில் கட்டப்பட்டு பணிகள் முடிந்தது குமரி மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவர் பிரபா ஜி ராமகிருஷ்ணன் தலைமையில் திறப்பு விழா நடந்தது. இணை ஆணையர் பழனிக்குமார் முன்னிலை வகித்தார்.
அறங்காவலர் குழு உறுப்பினர் ராஜேஷ் வரவேற்றார். மராமத்து பொறியாளர் ராஜ்குமார்,
திமுக மாணவரணி அமைப்பாளர் அருண்காந்த், கலை இலக்கிய பிரிவு மாநகர துணைத்த தலைவர் சத்யசாய்பாபு, கிளை செயலாளர் ஜீவா, வார்டு அவைத் தலைவர் நாஞ்சில் ராஜ், ஒப்பந்தகாரர் மெய்யன் உட்பட பலர் பங்கேற்றனர்.
கன்னியாகுமரி மாவட்ட கிள்ளியூர் தாலுகா செய்தியாளர், ஜெ.ராஜேஷ்கமல்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக