குடியாத்தம் நகராட்சி துவக்கப்பள்ளியில் நூற்றாண்டு விழா! சிறப்பு விருந்தினராக நகர மன்ற தலைவர் பங்கேற்பு! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 15 மார்ச், 2025

குடியாத்தம் நகராட்சி துவக்கப்பள்ளியில் நூற்றாண்டு விழா! சிறப்பு விருந்தினராக நகர மன்ற தலைவர் பங்கேற்பு!


குடியாத்தம் , மார்ச் 15 -

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகராட்சி துவக்கப் பள்ளியில் நூற்றாண்டு விழா சிறப்பாக நடைபெற்றது
 பள்ளி தலைமை ஆசிரியர் நாகலட்சுமி வரவேற்றார். இன்னர் வீல் தலைவி ஆயிஷா முன்னாள் நகர மன்ற தலைவர் புவியரசி இன்னர் வீல் செல்வகுமாரி முன்னாள்  இன்னர் வீல் தலைவர் கீதா லட்சுமி குத்து விளக்கு ஏற்றி வைத்தனர்.
 நகர மன்ற தலைவர் சௌந்தர்ராஜன் நகர மன்ற உறுப்பினர் நவீன் சங்கர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை புலவர் இராசி தலித் குமார் ஒருங்கிணைத்தார். ஊராட்சி மன்ற தலைவர்கள் சாந்தி மோகன் சுந்தர் கல்வி அறக்கட்டளை தலைவர் நிர்மலா கலை நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தனர். கலைநிகழ்ச்சியை ஜான் ஆசிரியை செல்வி காயத்ரி ஏற்பாடு செய்தனர் ஆர் கோமதி ஆசிரியை நன்றி உரையாற்றினார் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. முதன்மை கல்வி அலுவலர் மணிமொழி மாவட்ட தொடக்க பள்ளி அலுவலர் தயாளன் வட்டார கல்வி அலுவலர் உஷாராணி வட்டார கல்வி அலுவலர் கண்ணன் வட்டார கல்வி அலுவலர் அருள் லிங்கம் எஸ் எஸ் ஏ மேற்பரையாளர் வெண்ணிலா ஆசிரியர் பயிற்சிநர் லட்சுமி புரவலர் பாஸ்கர் தலைவர் எஸ் எம் சி தலைவர் வரலட்சுமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad