மானாமதுரை கல்குறிச்சி பள்ளியில் இரண்டு ஆசிரியர்கள் பணியிடை நீக்கம், மாவட்ட கல்வி அலுவலர் அதிரடி உத்தரவு. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 13 மார்ச், 2025

மானாமதுரை கல்குறிச்சி பள்ளியில் இரண்டு ஆசிரியர்கள் பணியிடை நீக்கம், மாவட்ட கல்வி அலுவலர் அதிரடி உத்தரவு.



 மானாமதுரை கல்குறிச்சி பள்ளியில் இரண்டு ஆசிரியர்கள் பணியிடை நீக்கம், மாவட்ட கல்வி அலுவலர் அதிரடி உத்தரவு.


சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள கல்குறிச்சி கிராமத்தில் செயல்பட்டுவரும் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் ராஜா, சாத்தையா என்ற இரண்டு ஆசிரியர்கள் மீது பள்ளியில் ஒழுங்கீனமாக நடந்துகொண்டது உட்பட மற்றும் பல்வேறு குற்றச்சாட்டுகளை பெற்றோர்கள் புகார் செய்திருந்தனர். இந்நிலையில் தாசில்தார் தலைமையிலான குழு அப்புகார் மீது விசாரணை மேற்கொண்டதின் அடிப்படையில் இரண்டு ஆசிரியர்களின் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் உறுதிபடுத்தப்பட்டது‌. அதனைத் தொடர்ந்து சிவகங்கை மாவட்ட கல்வி அலுவலர் திரு பாலுமுத்து அவர்கள் இரண்டு ஆசிரியர்களையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad