இளைஞர் சிலம்பம் விளையாட்டு சங்கம் நடத்திய மாபெரும் சிலம்பப் போட்டி - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 4 மார்ச், 2025

இளைஞர் சிலம்பம் விளையாட்டு சங்கம் நடத்திய மாபெரும் சிலம்பப் போட்டி


இளைஞர் சிலம்பம் விளையாட்டு சங்கம் நடத்திய மாபெரும் சிலம்பப் போட்டி 


வெலிங்டன் கன்டோன்மென்ட் மைதானத்தில் நடைபெற்றது. இதற்கு சிறப்பு விருந்தினராக  MRC commandment ,Brig krishnendu Das  மற்றும்   Wellington controlnment CEO vinit B Lote IDES கலந்து கொண்டனர் மற்றும் வழக்கறிஞர்கள் இமாம் , Iboo sait அவர்களும் கலந்து கொண்டனர்.. இந்நிகழ்ச்சியை தலைமையேற்று  இந்திய சிலம்ப விளையாட்டு சங்க தேசிய செயலாளர் விஜயன் மற்றும் மாநிலத் தலைவர் சௌந்தரராஜன்   மற்றும் மாநிலச் செயலாளர் சந்துரு மற்றும் மாநில பொருளாளர் திருநாவுக்கரசு  மற்றும் பல பயிற்சியாளர்களும்   தலைமை தாங்கினார்.. இதனை   தன்னார்வலர்கள் சங்க கூட்டமைப்பு வினோத்குமார் மற்றும் கோவர்தன் மற்றும் மூத்த கராத்தே பயிற்சியாளர் ராமகிருஷ்ணன் மற்றும் அன்பு அறக்கட்டளை சதீஷ்  , குன்னூர் ஆம்புலன்ஸ் சல்மான் மற்றும் பலர் கலந்து கொண்டனர். மேலும் இந்நிகழ்ச்சிக்கு வெலிங்டன் காவல் நிலைய காவலர்கள் சிறப்பாக பாதுகாப்பு அளித்தனர் மேலும் நீலகிரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் உ. நெடுமாறன் மற்றும் கி. இளவரசன் சிறப்பாக வழிநடத்தினர். இதில் சுமார் 12 மாவட்டங்களில் இருந்து 1200 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள்  இப் போட்டியில் பங்கு பெற்றனர் .. இப்  மாபெரும் சிலம்ப போட்டியை  ஏற்பாடு செய்த பயிற்சியாளர்களை பொதுமக்களும் தன்னார்வலர்களும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.


தமிழககுரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் விஷ்ணு தாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad