வேலூர், மார்ச் 11 -
வேலூர் மாவட்டம் மத்திய சிறையில் உள்ள சிறைவாசிகளுக்கு இன்று நாட்டு கோழி வளர்ப்பும் பராமரிப்பும் குறித்த தொழிற்பயிற்சி அளிக்கப்பட்டு சான்றி தழ்கள் வழங்கப்பட்டன.தமிழ்நாடு அரசின் சிறைகள் மற்றும் சீர்திருத்த சேவைகள் துறையின் கீழ் இயங்கும் வேலூர் மத்திய சிறையும், தமிழ்நாடு கால்நடை பல்கலைகழக பயிற்சி மற்றும் ஆராச்சி மையம், தமிழ்நாடு முன்னாள் சிறைவாசிகள் ஆதரவுசங்கம் இணைந்து சிறையில் உள்ள சிறைவாசிகள் 100 பேருக்கு நாட்டு கோழி வளர்ப்பும் பராமரிப்பும் குறித்து தொழிற்பயிற்சி அளிக்கப்பட்டது.இந்த நிகழ்விற்கு வேலூர் சரக சிறைத்துறை துணைத் தலைவர் க.சண்முகசுந்தரம் தலைமை தாங்கி பயிற்சி சான்றிதழ்களை வழங்கி பேசினார்.சிறை கண்காணிப்பாளர் பி.தர்மராஜ் முன்னிலை வகித்து பேசினார் முன்னதாக தமிழ்நாடு முன்னாள் சிறைவாசிகள் ஆதரவு சங்க செயலாளர் செ.நா.ஜனார்த்தனன் வரவேற்று பேசினார். தமிழ்நாடு முன்னாள் சிறைவாசிகள் சங்கத்தின் பொருளாளர் இரா.சீனிவாசன், செயற்குழு உறுப்பினர் திருமாறன், ஆகியோர் வாழ்த்தி பேசினர்.தமிழ்நாடு கால்நடை பல்கலைகழக பயிற்சி மற்றும் ஆராச்சி மையத்தின் இணை பேராசிரியர் டாக்டர் பி.பாண்டியன் பயிற்சி அளித்தார்.
நாட்டு கோழி வளர்த்தல், நாட்டு கோழி களை பராமரிக்கும் முறைகள், தீவன பாராமரிப்பு, நோய் பரவாமல் தடுப்ப தற்கான வழிமுறைகள் நோய் தொற்று ஏற்பட்டால் மேற்கொள்ள வேண்டிய தடுப்பூசி செலுத்தும் காலங்கள், விற்பனை வாய்ப்பு, குறைந்த முதலீடு மற்றும் சிறு தொழில்கள் மேற்கொள்ள வங்கிகளில் கடன் பெறும் முறைகள் குறித்து பயிற்சி அளித்தார். இந்த பயிற்சியில் 100 சிறைவாசிகள் பங்கேற்று பயிற்சி பெற்றனர். பயிற்சி பெற்ற அனைவருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.முடிவில் சிறை நல அலுவலர் ஆர்.மோகன் நன்றி கூறினார்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக