மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்ட தொழிலாளி : - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 31 மார்ச், 2025

மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்ட தொழிலாளி :



ஈரோடு வி. வி. சி. ஆர் நகரைச் சேர்ந்தவர் தங்கவேல்(58). தொழிலாளி. மதுப்பழக்கத்திற்கு அடிமையான அவர், குடிபோதை மனநல மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த சில நாட்களாக மதுப்பழக்கம் இல்லாமல் இருந்த தங்கவேல், மீண்டும் மது அருந்தியுள்ளார்.


இந்நிலையில் கடந்த 25-ம் தேதி, மதுவில் சல்பாஸ் மருந்து கலந்து அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை மீட்ட உறவினர்கள், கருங்கல்பாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், உடல் நிலை மோசமானது. இதனையடுத்து, தங்கவேலை ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து அவரது மகன் சீனிவாசன் அளித்த புகாரின் பேரில், ஈரோடு டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தமிழக குரல் இணையதள செய்தியாளர் ம.சந்தானம், ஈரோடு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad