சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்த எமரால்டு பகுதியை சேர்ந்த இரண்டு பேர் கைது
நீலகிரி மாவட்டம் உதகைக்கு உட்பட்ட இத்தலார் ஊராட்சி வ உ சி நகர் பகுதியை சேர்ந்த சிறுமிக்கு அவ்வூர் பகுதியைச் சேர்ந்த குட்டியா என்கிற சிவக்குமார் மற்றும் கௌதம் என்கிற விக்னேஷ்வரன் ஆகிய இரண்டு பேர் ஒரு வருடமாக தொடர்ந்து சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்து வந்த நிலையில் அச்சிறுமி கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு தைரியமாக முன்வந்து காவல் நிலையம் சென்று புகார் அளித்த நிலையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் குற்றம் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதேபோன்று பெண்களுக்கு மட்டும் சிறுமிகளுக்கு நடக்கும் அநீதிகளுக்கு எதிராக தைரியமாக முன்வந்து புகார் அளிக்கும் நிலையில் குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனையும் மேலும் இம்மாதிரியான குற்றங்களை தடுக்கவும் முடியும்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட இணையதள செய்தி பிரிவு.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக