சாயர்புரம் டாக்டர். ஜி. யு. போப் பொறியியல் கல்லூரி சார்பாக திருபணி செட்டிகுளம் பஞ்சாயத்தில் நாட்டு நலப்பணி திட்ட முகாம். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 12 மார்ச், 2025

சாயர்புரம் டாக்டர். ஜி. யு. போப் பொறியியல் கல்லூரி சார்பாக திருபணி செட்டிகுளம் பஞ்சாயத்தில் நாட்டு நலப்பணி திட்ட முகாம்.

சாயர்புரம் டாக்டர். ஜி. யு. போப் பொறியியல் கல்லூரி சார்பாக திருபணி செட்டிகுளம் பஞ்சாயத்தில் நாட்டு நலப்பணி திட்டம் முகாம் தொடக்க விழா நடைபெற்றது.

சாயர்புரத்தில் உள்ள டாக்டர். ஜி. யு. போப் பொறியியல் கல்லூரியின் நாட்டு நல பணி திட்டம் சார்பாக திருப்பணி செட்டிகுளத்தில் நாட்டு நலப்பணி முகாம் தொடக்க விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி தாளாளர் வழக்கறிஞர் கே. ரவீந்தர் சார்லஸ் தலைமை வகித்தார். 

கல்லூரி முதல்வர் டாக்டர் ஜே.ஜாஃபிந்த் முன்னிலை வகித்தார். விழாவில் சிறப்பு அம்சமாக தூத்துக்குடி நாசரேத் திருமண்டல சமூக நலத்துறை இயக்குனர் குருவானவர் ஜெபகுமார் ஜாலி நீர் நிலை பாதுகாப்பு பற்றி எடுத்துரைத்தார். 

திருப்பணி செட்டிகுளம் ஊராட்சி தலைவர் சுயம்புலிங்கம் முகாமை சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக திருநெல்வேலி அண்ணா பல்கலைக்கழக ரீஜனல் நாட்டு நல பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் டாக்டர் ஜெயந்தி மாணவ மாணவிகளுக்கு வாழ்த்துரை கூறினார் 

திருநெல்வேலி அண்ணா பல்கலைக்கழக நாட்டு நல பணி திட்ட அலுவலர் பேராசிரியர் டாக்டர் மதுமதி நாட்டு நல பணி குறித்து ஆலோசனை கூறினார் இந்த முகாமில் கல்லூரி மாணவ மாணவிகள் ஊர் பொதுமக்கள் உற்சாகமாக கலந்துகொண்டு முதல் நாள் நிகழ்ச்சி ஆக தொலைபேசியின் பயன்பாடு அதில் உள்ள ஆபத்துகளையும் விழிப்புணர்வு முகாமில் சிறப்பு விருந்தினராக தூத்துக்குடி மீனவன் யூ டிப்பர் சக்திவேல் கலந்துகொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினார். 

மாணவ மாணவிகள் மற்றும் ஊர் பொது மக்களும் கலந்து கொண்டனர் இந்த நிகழ்ச்சியை நாட்டு நல பணி திட்ட அலுவலர் மற்றும் இயந்திரவியல் துறை தலைவர் சா.டென்னிசன் செய்திருந்தார். இந்த நிகழ்ச்சியில் எஸ்தர் தங்கம், அன்டோனி மனுவேல் ராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad