தற்கொலை செய்து கொண்ட மாணவனின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 19 மார்ச், 2025

தற்கொலை செய்து கொண்ட மாணவனின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல்.


தற்கொலை செய்து கொண்ட மாணவனின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல்.


சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தியில் உள்ள அம்பேத்கார் நகரைச் சேர்ந்த ஸ்டாலின் - லிங்கேஸ்வரி ஆகியோரின் மூத்த மகன் ஆதீஸ்வரன் (16). இவர் திருப்பாச்சேத்தி அரசு பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். தற்போது அரசு பொதுத்தேர்வு எழுதி வரும் ஆதீஸ்வரன் திடீரென வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார். பின்னர் ஆதீஸ்வரனின் உடல் திருப்புவனம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. மாணவன் ஆதீஸ்வரனை அதே பகுதியைச் சேர்ந்த 4 பேர் அழைத்து சென்று கடுமையாக தாக்கி மிரட்டியதால் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படும் நிலையில், மாணவன் ஆதீஸ்வரனை மிரட்டிய 4 நபர்கள் கைது செய்ய வலியுறுத்தி மாணவனின் உறவினர்கள் திருப்புவனம் அரசு மருத்துவமனை முன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் மதுரை - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால், சாலையின் இருபுறமும் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. குடலை வாங்க மறுத்த ஆதீஸ்வரனின் உறவினர்களிடம் போலீசார் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad