உதகை எட்டின்ஸ் சாலையில் ஓடும் கழிவு நீர் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 21 மார்ச், 2025

உதகை எட்டின்ஸ் சாலையில் ஓடும் கழிவு நீர்

 


உதகை எட்டின்ஸ் சாலையில் ஓடும் கழிவு நீர் 

 

உதகை ஏடிசி லிருந்து பஸ் ஸ்டாண்ட் செல்லும் சாலையில் டேவீஸ் டேல் சந்திப்பில் குழந்தைகள் மையம் உள்ளது.

 

இதன் முன்புறம் இரண்டு நாட்களாக கழிவு நீர் ஓடிக் கொண்டுள்ளது, இதனை நகராட்சி உறுப்பினரோ மற்றவர்களோ கண்டு கொள்ளாமல் இருப்பது மிகவும் வருத்தக் கூடிய செயலாக உள்ளது மேலும் இங்கு குழந்தைகள் காப்பகம் உள்ளதால், மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தும் மிக முக்கிய சாலை ஆகும் இந்த கழிவு நீரினால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது


 மேலும்  இதன் வழியாக பேருந்தும் மற்ற வாகனங்களும் செல்வதால் வழிந்தோடும் கழிவு நீர் எல்லா இடத்திலும் தெரிக்கிறது ஆகவே மாவட்ட நிர்வாகம் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்

 

தமிழக குரல் இணைய தள செய்திகளுக்காக செய்தி தொகுப்பு செரீஃப்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad