கல்லூரி ஆண்டு விழா - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 22 மார்ச், 2025

கல்லூரி ஆண்டு விழா

 


கல்லூரி ஆண்டு விழா 

        

உதகை எமரால்டு ஹைட்ஸ் மகளிர் கல்லூரியின் ஆண்டு விழா 22-03-2025 இன்று கல்லூரி அரங்கில் நடைபெற்றது.  கல்லூரி செயலாளர் திரு. எஸ். மோதிலால் கட்டாரியா அவர்கள் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் முனைவர் கே. சுஜாதா அவர்கள் வரவேற்புரை வழங்கினார்.  விலங்கியல் துறை இணைப் பேராசிரியர் முனைவர் எம். சுவர்ணலதா அவர்கள் ஆண்டறிக்கை வாசித்தார்.

       

நீலகிரி கலை  மற்றும் அறிவியல் கல்லூரியின் செயலாளர் மற்றும் நிர்வாக இயக்குநர் ரஷீத் கஸ்ஸாலி அவர்கள் இவ்விழாவின் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு விழா சிறப்புரையாற்றினார்.

  

அவர், " கல்லூரி பல வாய்ப்புகளை மாணவிகளுக்குத் தருகிறது. அந்த வாய்ப்புகளை உரிய நேரத்தில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தனித்திறமைகளைக் கண்டறிந்து அதில் நன்றாகப் பயிற்சி பெற்று, தங்களுக்கான வேலைவாய்ப்பை உருவாக்கிக் கொள்ள வேண்டும். இப்பொழுது உள்ள போட்டிமயமான உலகில் கல்வியறிவுடன் கூடிய அனுபவ அறிவும், தன்னம்பிக்கையும், மொழியறிவும் இருந்தால் தான் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும் " என்று கூறி மாணவிகளுடன் கலந்துரையாடினார்.

      

பிறகு, கல்வியிலும் பிற துறைகளிலும் வெற்றி பெற்ற மாணவிகளுக்குப் பரிசுகளை வழங்கி கௌரவித்தார்.  அதனைத் தொடர்ந்து மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. கல்லூரி தலைவர் திரு. என். கிருஷ்ணமூர்த்தி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.  வணிகவியல் துறை உதவிப் பேராசிரியர் முனைவர்.                       அ. முத்தரசி அவர்கள் நன்றியுரை வழங்கினார்.  இவ்விழாவில் கல்லூரி நிர்வாக உறுப்பினர்கள், பெற்றோர்கள், ஆகியோரும் கலந்து கொண்டனர்.  இவ்விழாவிற்கான ஏற்பாட்டை அனைத்துத் துறைப் பேராசிரியர்களும் செய்திருந்தனர். 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட புகைப்பட கலைஞர் என் வினோத் குமார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad