தூத்துக்குடியில் நேற்று பசும்பொன் முத்துராமலிங்க தேவர் மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் நிறுவனத் தலைவர் இசக்கி ராஜாவின் பிறந்தநாள் விழா 3-வது மைல் பகுதியில் கொண்டாடப்பட்டது. தென் மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
இந்நிலையில், நிகழ்ச்சி முடிந்து, தூத்துக்குடியில் இருந்து திருநெல்வேலி நோக்கி சிலர் காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, வாகைக்குளம் சுங்கச்சாவடிக்கு கார் வந்த போது, டோல்கேட் ஊழியர்கள் அவர்களிடம் கட்டணம் கேட்டு நிறுத்தியுள்ளனர்.
இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், காரில் வந்த சுமார் 50-க்கும் மேற்பட்டோர் சுங்கச்சாவடி ஊழியர்களை சரமாரியாக தாக்கி டோல்கேட்டை அடித்து நொறுக்கினர். மேலும், அங்குள்ள பொருட்களையும் அவர்கள் சூறையாடினர்.
இந்த சம்பவத்தில் டோல்கேட்டில் பணிபுரிந்த தூத்துக்குடி சோரீஸ்பரம் பகுதியைச் சேர்ந்த பாபு (45), திருநெல்வேலியைச் சேர்ந்தஆகாஷ் (30) ஆகிய இரண்டு ஊழியர்கள் பலத்த காயத்துடன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றன
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக