நீலகிரி மாவட்ட தோட்டதொழிலாளர். கூட்டுறவு சங்கத்தின் 61 வதுபொதுப்பேரவைகூட்டம் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 13 ஏப்ரல், 2025

நீலகிரி மாவட்ட தோட்டதொழிலாளர். கூட்டுறவு சங்கத்தின் 61 வதுபொதுப்பேரவைகூட்டம்


 நீலகிரி மாவட்ட தோட்டதொழிலாளர். கூட்டுறவு சங்கத்தின் 61  வதுபொதுப்பேரவைகூட்டம்

     

குன்னூர் மவுண்ட்ரோடு, புனித அந்தோணியார் தேவாலயம் திருமண மண்டபத்தில் ,நீலகிரி மாவட்டத்தோட்டத்தொழிலாளர் கூட்டுறவுச் சிக்கனம் மற்றும் கடன் சங்கத்தின் 61-வது பொதுப்பேரவைக்கூட்டம் நடைபெற்றது.

 

சங்கத்தின் துணைச் செயலாளர் திரு.நீலமேகம், ஆண்டறிக்கை மற்றும் ஆண்டு வரவு செலவை உறுப்பினர்களுக்கு எடுத்துரைத்தார். சங்கத்தின் செயலாளர் திருமதி.ஜூலியட் சகாயராணி முன்னிலை வகித்தார். நீலகிரி மண்டலக் கூட்டுறவுச்சங்கங்களின் இணைப்பதிவாளர், திரு.இரா.தயாளன் அவர்கள், தலைமையேற்றார் .அவர் பேசுகையில் சர் ப்ரெடெரிக் நிக்கல்சன் அவர்களால் தான் இந்தியாவில் கூட்டுறவு இயக்கம் தோன்றியது. பணக்கார வியாபாரிகளின் சுரண்டலில் இருந்து விவசாயப்பெருங்குடி மக்கள், மகளிர், மாற்றுத்திறனாளிகள், முன்னுரிமைப் பிரிவினர் ஆகியோரைக் காப்பாற்றும் முதன்மையான நோக்கம் கொண்டது கூட்டுறவு என்றும் பாராளுமன்ற குடிநாயகத்தை(ஜனநாயகம்)விட கூட்டுறவுக் குடிநாயகம் மக்களுக்கு அதிக உரிமையை வழங்குகிறது என்றும் ஒவ்வோராண்டும் ஒவ்வொரு கூட்டுறவுச்சங்கமும் பொதுப்பேரவை கூட்டி, சங்கத்தின் வரவு செலவு மற்றும் தணிக்கை அறிக்கை குறித்து விவாதிக்க வேண்டும் என்றும் உறுப்பினர்கள் எல்லாரும் வருகிற பொதுப்பேரவையிலாவது பெரிய எண்ணிக்கையில் கலந்து கொண்டு சங்கச்செயல்பாடுகள் குறித்து கலந்துரையாடவேண்டும் என்றும் உரையாற்றினார். சங்கம் 2021-2022 நிதியாண்டில் ரூபாய் ஒரு கோடியே முப்பத்தாறு இலட்சம் நிகர லாபத்தில் செயல்படுவதால் 14 சதவீதம் லாபப்பங்கு (டிவிடெண்ட்) பெறலாம் என்றும் தெரிவித்தார்.உரையாற்றிய உறுப்பினர் சிலர் எழுப்பிய சந்தேகங்களுக்கு துணைச்செயலாளர் செயலாளர் மற்றும் இணைப்பதிவாளர் ஆகியோர் பதில் சொல்லி சந்தேகங்களைத் தீர்த்து வைத்தனர்.


மாவட்ட தமிழக குரல் இனையதள செய்திகளுக்காக கோத்தகிரி ராஜெஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad