பழைய ஓய்வூதிய திட்டம், சிபிஎஸ் சந்தா இறுதித் தொகை வழங்க கோரியும், கருணை அடிப்படையில் வேலை வழங்க கோரி காத்திருப்பு போராட்டம்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 2 ஏப்ரல், 2025

பழைய ஓய்வூதிய திட்டம், சிபிஎஸ் சந்தா இறுதித் தொகை வழங்க கோரியும், கருணை அடிப்படையில் வேலை வழங்க கோரி காத்திருப்பு போராட்டம்!

ராணிப்பேட்டை , ஏப்ரல் 02 -

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கலவை, வாலாஜா, அரக்கோணம், சோளிங்கர், ஆற்காடு, நெமிலி, ஆகிய பகுதிகளில் உள்ள வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய் துறை கிராம உதவியாளர் சங்கம் சார்பில் பழைய ஓய்வூதிய திட்டம், சிபிஎஸ் சந்தா இறுதித் தொகை வழங்க கோரியும், கருணை அடிப்படையில் வேலை வழங்க கோரி உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.தொடர்ந்து தமிழக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி தங்களுடைய எதிர்ப்புகளை தெரிவித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் 

சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ்குமார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad