தூத்துக்குடி - நீர், மோர் பந்தலை தூத்துக்குடி அதிமுக தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் திறந்து வைத்தார். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 4 ஏப்ரல், 2025

தூத்துக்குடி - நீர், மோர் பந்தலை தூத்துக்குடி அதிமுக தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் திறந்து வைத்தார்.

தூத்துக்குடி - நீர், மோர் பந்தலை தூத்துக்குடி அதிமுக தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் திறந்து வைத்தார்

தூத்துக்குடி ஏப் 4, தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் கோடைகால தண்ணீர் பந்தல் அமைக்க அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டிருந்தார்.  

தூத்துக்குடி வடக்கு ரத வீதியில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளரும், 39 வட்டக் கழக செயலாளருமான திருச்சிற்றம்பலம் ஏற்பாட்டில் அமைக்கப்பட்டிருந்த கோடைகால நீர்,மோர் பந்தலை தூத்துக்குடி தெற்கு யமாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். 

தொடர்ந்து பொதுமக்களுக்கு தர்பூசணி, ஆப்பிள், மாதுளை, ஆரஞ்ச், செவ்வாழை பழம், உள்ளிட்ட பழவகைகளையும், இளநீர், மோர், சர்பத்,பழரசம் உள்ளிட்ட குளிர்பானங்களையும் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டணர். இதற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி தெற்கு மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளரும், 39 வட்டக் கழக செயலாளருமான திருச்சிற்றம்பலம் சிறப்பாக செய்திருந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad