திருச்செந்தூர் - ஸ்ரீசரவணய்யர் நடுநிலைப்பள்ளி மாணவிகள் தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை திட்டத்தேர்வில் இப்பள்ளி மாணவர்கள் மூன்று பேர் தேர்ச்சி. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 15 ஏப்ரல், 2025

திருச்செந்தூர் - ஸ்ரீசரவணய்யர் நடுநிலைப்பள்ளி மாணவிகள் தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை திட்டத்தேர்வில் இப்பள்ளி மாணவர்கள் மூன்று பேர் தேர்ச்சி.

திருச்செந்தூர், ஸ்ரீசரவணய்யர் நடுநிலைப்பள்ளியானது 1895 முதல் கடந்த 130 வருடங்களாக செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் பள்ளியாகும். தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை திட்டத்தேர்வில் இப்பள்ளி மாணவர்கள் மூன்று பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

பிப்ரவரி மாதம் நடைபெற்ற இத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மாதம் தோறும் ரூ.1000 வீதம் கல்வி உதவி தொகை பெறுவதற்கு தகுதி பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளான அபிஷேக், முருகேஸ்வரி, ஆரியசந்திரா ஆகியோரை வட்டார கல்வி அலுவலர்கள் பாப்கயஸ்,மாணிக்கராஜ், பள்ளி செயலர் ச.ராமச்சந்திரன், மாணவர்களுக்கு பயிற்சி அளித்த தலைமையாசிரியை ந.குணசுந்தரி, ஆசிரியை க.சாந்தி மற்றும் ஆசிரிய,ஆசிரியைகள், பெற்றோர் ஆசிரிய சங்கத்தினர் பாராட்டினர். 

வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளுக்கு வட்டார கல்வி அலுவலர் நினைவுப்பரிசு வழங்கினார். கடந்த 12 வருடங்களாக தேசிய திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளைத்தான் இப்பள்ளி நிர்வாகம் குடியரசு தினம், சுதந்திரதினம் போன்ற தேசிய விழாக்களில் தேசிய கொடியேற்ற வைத்து சிறப்பு செய்வது குறிப்பிடதக்கது

தமிழக குரல் செய்திகளுக்காக MT.அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad