உப்பட்டி யில் உலக புவி தினத்தை முன்னிட்டு சிறப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 22 ஏப்ரல், 2025

உப்பட்டி யில் உலக புவி தினத்தை முன்னிட்டு சிறப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது


 உப்பட்டி யில் உலக புவி தினத்தை முன்னிட்டு சிறப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.


தமிழ்நாடு அரசு வனத்துறை, கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், நெல்லியாளம் நகராட்சி, ஆல் தி சில்ட்ரன் ஆகியன இணைந்து நடத்திய நிகழ்ச்சிக்கு கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் செயலாளர் சிவசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். உப்பட்டி உதவி மின் பொறியாளர் கார்த்திக், வானவர்கள் சுரேஷ்குமார் (தேவாலா), பொலிக்ஸ் (பிதர்காடு) நகராட்சி தூய்மை களப்பணி உதவியாளர் மலர்க்கொடி,  வியாபாரிகள் சங்க தலைவர் கணேஷ், செயலாளர் ஐமுட்டி, ஆல் தி சில்ட்ரன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஜித் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 


தேவாலா வனசரகர் சஞ்சீவி, கூடலூர் மின்சார வாரிய செயற்பொறியாளர் (பொ) முத்துக்குமார், சி.பி.ஆர் சுற்றுச்சூழல் கல்வி மைய கள அலுவலர் குமாரவேலு, காவல்துறை ஆய்வாளர் ரோஸ்லின் ஆகியோர் பேரணியை துவக்கி வைத்து பேசும்போது நம்மை காக்கும் சுமக்கும் பூமியை காப்பாற்ற வேண்டியது அனைவரின் கடமையாகும். புவியை காக்க மரக்கன்றுகள் அதிகம் நடவேண்டும். பிளாஸ்டிக் பொருட்கள் தவிர்க்க வேண்டும். புவி வெப்பமயாமாதல் தடுக்க மாற்று எரிசக்தி முறைகளை அதிகம் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என வலியுறுத்தினர்.  புவி தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு போஸ்டர் வெளியிடப்பட்டது.  தொடர்ந்து உப்பட்டி அத்திகுன்னா சந்திப்பு பகுதியில் துவங்கிய பேரணியில் புவியை கப்போம், இயற்கை வளத்தை மீட்போம், பிளாஸ்டிக் தவிர்ப்போம், மரங்கள் வளர்ப்போம், உள்ளிட்ட கோஷங்கள் எழுப்பியவாறு உப்பட்டி பஜார் வழியாக புஞ்சவயல் ஐடிஐ சென்றது. 


ஐடிஐ வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. நிகழ்ச்சியில் நகராட்சி பணியாளர்கள், வனத்துறையினர், ஐடிஐ பயிற்றுநர்கள், ஐடிஐ மாணவர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad