ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவில் தேரோட்டம் ஆய்வு கூட்டம். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 25 ஏப்ரல், 2025

ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவில் தேரோட்டம் ஆய்வு கூட்டம்.

ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவில் தேரோட்டம் ஆய்வு கூட்டம். 

ஸ்ரீவைகுண்டம் ஏப்ரல் 25,  நவதிருப்பதிகளில் முதலாவதாக உள்ள திவ்யதேசம் ஸ்ரீவைகுண்டம் கள்ளப்பிரான் கோவிலில் சித்திரை திருவிழா ஏப்ரல் 18 ந்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. ஏப்ரல் 26 ந்தேதி 9 ம் திருவிழா முன்னிட்டு தேரோட்டம் நடைபெறுகிறது. 

அதற்கான ஏற்பாடுகள் குறித்து ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. குடிநீர். சுகாதாரம். மின்சாரம். தேரோடும் சாலை வசதி. காவல் துறை பாதுகாப்பு. போக்குவரத்து மாற்றம் பற்றி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 

இக்கூட்டத்தில் மண்டல துணை வட்டாட்சியர் லோகநாதன். காவல் துறை ஆய்வாளர் பத்மநாப பிள்ளை. தீ தடுப்பு துறை அதிகாரி முத்து. மின் பாதை ஆய்வாளர் ஆறுமுகம். ஊரக வளர்ச்சி துறை சுகாதார அதிகாரி தியாகராஜன். அறநிலைய துறை கோவில் நிர்வாக அதிகாரி கோவல மணிகண்டன். ஸ்தலத்தார் ராஜப்பா வெங்கடாச்சாரி. முன்னாள் பேரூராட்சி தலைவர் கந்தசிவசுப்பு. கோவில் எழுத்தர் இசக்கி பாண்டியன். வியாபாரி சங்க தலைவர் பெரியசாமி. பொருளாளர் ராமமூர்த்தி. வருவாய் ஆய்வாளர் பிரீத்தி. கிராம நிர்வாக அதிகாரி ரீனா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad