வேதாளை கடற்கரை பகுதியில் இலங்கைக்கு படகு மூலமாக கடத்த இருந்த ரூ50 லட்சம் மதிப்புள்ள 88 பண்டல் கஞ்சா பறிமுதல் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 14 மே, 2025

வேதாளை கடற்கரை பகுதியில் இலங்கைக்கு படகு மூலமாக கடத்த இருந்த ரூ50 லட்சம் மதிப்புள்ள 88 பண்டல் கஞ்சா பறிமுதல்

வேதாளை கடற்கரை பகுதியில் இலங்கைக்கு படகு மூலமாக கடத்த இருந்த ரூ50 லட்சம் மதிப்புள்ள 88 பண்டல் கஞ்சாவை போதை பொருள் தடுப்பு புலனாய்வு போலீசார் கைப்பற்றி 3 பேரை கைது செய்தனர்.

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் கடற்கரை வேதாளை பகுதியில் இருந்து தொடர்ந்து கடத்தல் நடைபெற்று வருகிறது.இதனை தொடர்ந்து இலங்கைக்கு கடத்துவதற்காக வேதாளை கடற்கரை பகுதியில் 88 பண்டல் கஞ்சா புதைத்து வைக்கபட்டிருப்பது குறித்து சென்னையில் உள்ள 

சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார்க்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் வேதாளை கடற்கரை இடையர்வலசை ரயில்வே கேட் பகுதியில் புதைத்து வைத்திருந்த 50 லட்சம் மதிப்பு உள்ள 88 பண்டல் 176 கிலோ கஞ்சாவை கைப்பற்றிய போலீசார் பகுதியை சேர்ந்த சத்தீஸ்வரன் காமேஷ் கண்ணன் ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். 

இதன் மதிப்பு ரூபாய் 50 லட்சத்திற்கு அதிகமாக இருக்கும் என இவை ஆந்திராவில் இருந்து வாங்கி வந்ததாகவும் படகு மூலமாக இலங்கைக்கு கடத்த இருந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad