மகன் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி தாய் மற்றும் உறவினர்கள் எஸ் பி அலுவலகத்தில் புகார்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 14 மே, 2025

மகன் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி தாய் மற்றும் உறவினர்கள் எஸ் பி அலுவலகத்தில் புகார்!

மகன் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி தாய் மற்றும் உறவினர்கள் எஸ் பி அலுவலகத்தில் புகார்!
திருப்பத்தூர் , மே 14 -

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர் ‌ பாரதிநகர் பகுதியைச் சேர்ந்த கோபி மற்றும் சுமதி மகன் ரமண்(வயது 27) இவர் கடந்த நான்காம் தேதி எம் எம் நகர் பகுதியில் உள்ள அரசு சிறுவர் பூங்காவில் உள்ள இரும்பு கம்பியில் தூக்கிட்டு தற்கொலை செய்து  கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. 
இந்த நிலையில்  மகன் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி சுமதி மற்றும் அவரு டைய உறவினர்கள் சுமார் 30 க்கும் மேற் பட்டோர் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அந்த மனுவில் குட்ட ராஜ பாளையம் பகுதியைச் சேர்ந்த மாதுவிடம் 50 ஆயிரம் பணம் மற்றும் சக்தி என்ற நபரிடம் 30 ஆயிரம் பணத்தை ராமன் வாங்கி இருந்ததாகவும் இதன் காரண மாக இருவரும் மது போதையில் அவ்வப் போது வீட்டிற்கு வந்து தகராறில் ஈடுபட்ட தாகவும் பணம் கொடுக்காத காரணத் தால் தனது மகனை அடித்து கொன்று இருக்க கூடும் எனவும அவர்கள் மீது சந்தேகம் உள்ளது எனக் கூறியும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் எனது மகன் சார்பில் சந்தேகத் தை தீர்த்து வைக்க வேண்டும் மேலும் அவர்கள் இரண்டு பேரையும் நேரில் அழைத்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை வைத் தனர்.

செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad