பேராவூரணியில் மே தின கொடியேற்று விழா
பேராவூரணி, மே,01;தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் மே1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு லாரி லோடுமேன் சங்கத்தின் சார்பில் கொடியேற்று விழா நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு சங்க காப்பாளர் ஆரிய கண்ணன் தலைமை வகித்தார்.டிஏஜெ 520 லாரி லோடுமேன் சங்க தலைவர் ராஜேந்திரன், பொருளாளர் காளிமுத்து, செயலாளர் ராஜரத்தினம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விவசாயத் தொழிலாளர் சங்க மாநில குழு உறுப்பினர் ராஜமாணிக்கம் கொடி ஏற்றி வைத்து பேசினார்.
நிகழ்ச்சியில் விவசாயத் தொழிலாளர் சங்க பேராவூரணி ஒன்றிய செயலாளர் சித்திரவேலு, விவசாய சங்க ஒன்றிய செயலாளர் கருணாமூர்த்தி, சிபிஐ நகர செயலாளர் மூர்த்தி, சிபிஐ பேராவூரணி ஒன்றிய செயலாளர் வீரமணி ஆகியோர் உழைக்கும் தொழிலாளர்களை வாழ்த்தி பேசினர். முருகேசன், சரவணன், ரவி மற்றும் லாரி லோடுமேன் தொழிலாளிகள் கலந்து கொண்டனர்.பட்டாசுகள் வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.
பேராவூரணி த.நீலகண்டன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக