ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தமிழக அரசு தேர்தல் காலத்து வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி நெற்றியில் நாமம் போட்டு கோஷம் எழுப்பினர்.
இதில், தேர்தல் காலத்தில் அளித்த வாக்குறுதியின்படி 2000 ரூபாய் வழங்கப்பட்டு வரும் பென்சனாக 6750 ரூபாயாக வழங்கப்படும் என தெரிவித்ததை வழங்க வேண்டும் மற்றும் சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி பென்சன் மற்றும் ஊதியத்தை திருத்தி அமைத்திட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணாவில் ஈடுபட்டு கோஷங்களை எழுப்பினர். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு நிலவியது.
தமிழக குரல் இணையதள செய்தியாளர் செ.கோபால், ஈரோடு.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக