தமிழ்நாடு அனைத்து சத்துணவு அங்கன்வாடி ஓய்வுதியர் சங்கம் சார்பில் முதல் ஒன்றிய மாநாடு நடைபெற்றது. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 29 ஜூன், 2025

தமிழ்நாடு அனைத்து சத்துணவு அங்கன்வாடி ஓய்வுதியர் சங்கம் சார்பில் முதல் ஒன்றிய மாநாடு நடைபெற்றது.


தமிழ்நாடு அனைத்து சத்துணவு அங்கன்வாடி ஓய்வுதியர் சங்கம் சார்பில் முதல் ஒன்றிய மாநாடு நடைபெற்றது.



மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் தமிழ்நாடு அனைத்து சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில் முதல் ஒன்றிய மாநாடு ஒன்றிய அமைப்பாளர் முருகேசன் தலைமையில் திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்றது. தமிழக முதல்வர் கடந்த சட்டமன்ற தேர்தலில் போது நம்பிக்கையான வாக்குறுதி அளித்திருந்தார் நான்கு ஆண்டுகள் கடந்து விட்டது இன்னும் எங்களுக்கு எந்த விதமான கோரிக்கையும் நிறைவேற்றித் தரவில்லை எனவே எங்களது வாழ்வாதார கோரிக்கையான குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூபாய் 7850/, பெற்றிட விலைவாசி ஏற்றத்திற்கு ஏற்ப அகவிலை படியுடன் குடும்ப ஓய்வூதியம் பெற்றிட காசு இல்லா மருத்துவம் பண்டிகை முன்பணம் உங்கள் கட்சி தொகையை உயர்த்தி பெற்றிட இந்த மாநாடு மூலம் நாங்கள் கோரிக்கையை தமிழக முதல்வருக்கு வைக்கின்றோம் .இதை உடனடியாக எங்களுக்கு நிறைவேற்றித் தரும்படி இந்த முதல் மாநாட்டினை நாங்கள் நடத்தி இருக்கின்றோம். இதில் சிறப்பு விருந்தினராக அய்யங்காளை கலந்து கொண்டார். மற்றும் மாவட்டத் துணைத் தலைவர்கள் இணை செயலாளர்கள், முத்துமீனா ,இந்துமதி, தனபால், சொக்கலிங்கம் கிருஷ்ணன் சந்திர பாண்டி, கணேசன், எஸ்.எ. பாண்டியம்மாள், புஷ்பம், மருதுபாண்டி ,நிர்மலா, ஆகியோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad