12 வது வளைவு சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்த நபரை தாக்கிய கரடி கள் மருத்துவமனையில் அனுமதி! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 26 ஜூலை, 2025

12 வது வளைவு சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்த நபரை தாக்கிய கரடி கள் மருத்துவமனையில் அனுமதி!

12 வது வளைவில் சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்த நபரை தாக்கிய கரடிகள் மருத்துவமனையில் அனுமதி!
ஜோலார்பேட்டை , ஜுலை 26 -

ஜோலார்பேட்டை அருகே ஏலகிரி மலை யின் 12 வது வளைவில் சாலையில் இரு சக்கர வாகனத்தில் வந்த நபரை கரடிகள் தாக்கியதில் மருத்துவமனையில் அனு மதி வனத்துறையினர் விசாரணை !

திரும்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த வக்கணம்பட்டி பகுதியை சேர்ந்த மாணிக்க கவுண்டர் என்பவரின் மகன் கிருஷ்ணமூர்த்தி (வயது 65)  தேங்காய் மற்றும் வெல்லம் வியாபாரம் செய்து வரு கிறார்.இந்த நிலையில் ஏலகிரிமலையில் வியாபாரம் முடித்துவிட்டு கிருஷ்ணமூர் த்தி நேற்று இரவு எட்டு மணி அளவில் ஏலகிரி மலையிலிருந்து வக்கணம்பட்டி பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது ஏலகிரிமலையின் 12 வது வளைவில் உள்ள சாலையில் கரடி ஒன்று படுத்து இருந்துள்ளது. மற்றொரு  கரடி அருகே நின்று கொண்டிருந்ததுள் ளது .
அப்போது கிருஷ்ணமூர்த்தி இருசக் கர வாகனத்தில் வந்தபோது சாலையில் படுத்திருந்த கரடி கிருஷ்ணமூர்த்தி மீது சீறி பாய்ந்துள்ளது. அதில் கிருஷ்ணமூர்த் திக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது.அதன் பின் கிருஷ்ணமூர்த்தி கத்திகூச்சலிட்டு ள்ளார்.அப்போது அங்கிருந்த பொது மக்கள் கரடியை விரட்டியுள்ளனர். அதன் பின்னர் 108 ஆம்புலன்ஸ் மற்றும்வக்கண பட்டியிலிருந்த கிருஷ்ணமூர்த்தியின் மகன் மணிகண்டனுக்கு  பொதுமக்கள் தகவல் கொடுத்துள்ளனர். 108 ஆம்புலன் ஸ்வர காலதாமதமானதால் வக்கணப் பட்டி பகுதியிலிருந்து விரைந்து வந்த கிருஷ்ணமூர்த்தியின் மகன் மணிகண் டன் இருசக்கர வாகனத்தில்கிருஷ்ணமூர் த்தியை அழைத்து கொண்டுதிருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்திக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இது குறித்துவனத்து றை யினருக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது. தகவலல் அறிந்து வந்த வன அலு வலர் அண்ணாமலை மற்றும் தமிழன் ஆகியோர் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad