17 வயது சிறுமி பலி; போக்சோ சட்டத்தில் கணவன் கைது - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 22 ஜூலை, 2025

17 வயது சிறுமி பலி; போக்சோ சட்டத்தில் கணவன் கைது



ஈரோடு மாவட்டம் புன்செய் புளியம்பட்டி அருகே வெங்க நாயக்கன்பாளையத்தை சேர்ந்த ரங்கன் - கலாமணி தம்பதியின், 17 வயது மகள் எட்டாம் வகுப்பு படித்துவிட்டு, விவசாய கூலி வேலைக்கு சென்று வந்தார். இவரது உறவுக்கார வாலிபர் பவானிசாகரை அடுத்த தாண்டாம்பாளையத்தை சேர்ந்த கூலி தொழிலாளி சக்திவேல் (31). இருவருக்கீம் கடந்த 15ம் தேதி திருமணம் நடந்துள்ளது.


இந்நிலையில், 16ம் தேதி வயிறு வலிப்பதாக சிறுமி தனது தாயிடம் கூறியுள்ளார். சத்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். சிகிச்சை பெற்று வந்த நிலையில், 17ம் தேதி சிறுமி இறந்தார். அவரது தாய் கலாமணி புன்செய்புளியம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்ததை தொடர்ந்து, போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.


இதுகுறித்து போலீசார் கூறியதாவது: திருமணம் நடந்த இரண்டு நாளில் சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டதால், மாத்திரை வாங்கிக்கொடுத்துள்ளனர். ரத்தப்போக்கு அதிகமான நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்தது தெரியவந்தது. சிறுமி தாய் புகாரின்படி சக்திவேல் மீது, குழந்தை திருமண தடுப்பு சட்டம் மற்றும் போக்ஸோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தோம். சக்திவேல் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறைக்கு அனுப்பப்பட்டார்.


செ.கோபால், ஈரோடு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad