திருப்பூர் காலேஜ் ரோடு, எம்.ஜி.ஆர் நகரில் 9-7-2025 அன்று சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில், அங்கிருந்த வடமாநில தொழிலாளர்களின் 27 தகர வீடுகள் எரிந்து முற்றிலும் சேதமடைந்ததை தொடர்ந்து,
தகவல் அறிந்த திருப்பூர் மத்திய மாவட்ட திமுக செயலாளர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் ஆகிய க. செல்வராஜ் எம் எல் ஏ அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டதுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறியதோடு, அரசு தரப்பிலும், தனிப்பட்ட முறையிலும் தன்னால் முடிந்த உதவியை செய்வதாக உறுதியளித்தார்
இந்நிலையில் தீ விபத்தால் பாதிக்கப்பட்டவர்களை சிறுபூலுவபட்டி அம்மன் திருமண மண்டபத்தில் தங்க வைக்க ஏற்பாடுகள் செய்ததுடன் 10-7-2025 அன்று நேரில் சென்று நலம் விசாரித்து பாதிக்கப்பட்ட 27 குடும்பத்தினருக்கு துணை நிற்கும் விதமாக தனது சொந்த நிதியிலிருந்து தலா 10 ஆயிரம் ரூபாய் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் வழங்கினார் தீ விபத்து மழையினால் பாதிப்பு போன்ற பேரிடர் காலங்களில் மக்களுக்கு உதவ திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராஜ் எம் எல் ஏ அவர்கள் முதல் ஆளாக வந்து நின்று பண உதவி உணவு உடை கொடுத்து உதவுகிறார் என்று பொதுமக்கள் கூறினார்கள் மேலும் இந்த நிகழ்வில் அஇதொமுச துணை தலைவர் தெற்கு மாநகர திமுக செயலாளர் டி கே டி மு நாகராசன் துணைமேயர் பாலசுப்பிரமணியம் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக