அரசு மேல்நிலைப்பள்ளி இத்தலாரில் போதை விழிப்புணர்வு - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 7 ஆகஸ்ட், 2025

அரசு மேல்நிலைப்பள்ளி இத்தலாரில் போதை விழிப்புணர்வு

 


அரசு மேல்நிலைப்பள்ளி இத்தலாரில் போதை விழிப்புணர்வு நிகழ்ச்சியானது பள்ளி தலைமை ஆசிரியர் திரு. தேவராஜன் தலைமையில் நடைபெற்றது. பள்ளியின் பட்டதாரி ஆசிரியர் திரு. பி கண்ணன் அவர்கள் வரவேற்புரை  வழங்கினார். இதில் எமரால்டு காவல் உதவி ஆய்வாளர் திரு. வாசுதேவன் அவர்கள் மாணவர்களுக்கு போதையை விழிப்புணர்வு பற்றி தெளிவாக எடுத்துரைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் அலுவலக பணியாளர்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டார்கள். இறுதியில் பள்ளியின் பட்டதாரி ஆசிரியர் திரு எம்.மணிகண்டன் நன்றியுரை கூறினார்.

தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad