திருப்பூருக்கு எடப்பாடியார் வருகையையொட்டி எஸ்பி வேலுமணி அவர்கள் தலைமையில் ஆலோசனை கூட்டம் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 23 ஆகஸ்ட், 2025

திருப்பூருக்கு எடப்பாடியார் வருகையையொட்டி எஸ்பி வேலுமணி அவர்கள் தலைமையில் ஆலோசனை கூட்டம்


வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் 210 தொகுதிகளில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சி அமைக்கும் என முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி கூறினார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் ஒவ்வொரு மாவட்டமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்து வருகிறார் அவர் செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் திருப்பூரில் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார் அதற்கான முன்னேற்பாடுகள் பணிகளை தொடர்பாக ஆலோசனை கூட்டம் திருப்பூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது கூட்டத்திற்கு மாநகர மாவட்ட கழகச் செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்எல்ஏ தலைமை தாங்கினார் மாவட்ட செயலாளர் உடுமலை ராதாகிருஷ்ணன் எம் எல் ஏ புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் மகேந்திரன் எம்எல்ஏ மாநகர் மாவட்ட பொறுப்பாளர் தாமோதரன் எம் எல் ஏ பல்லடம் தொகுதி எம்எல்ஏ எம் எஸ் ஆனந்தன் திருப்பூர் வடக்கு எம்எல்ஏ விஜயகுமார் முன்னாள் எம்பி சிவசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி எம்எல்ஏ பங்கேற்று பேசியதாவது எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் எழுச்சியோடு வரவேற்கிறார்கள் அவர் திருப்பூர் வருகையை முன்னிட்டு சுவர் விளம்பரங்கள் இரட்டை இலை சின்னத்துடன் வரையுங்கள் வீடு வீடாக  சென்று அழைப்பிதழ்களை  கொடுத்து பிரச்சாரத்திற்கு அழைக்க வேண்டும் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் 50 ஆயிரம் வாக்காளர்களை அழைத்து வரவேண்டும்

2026 தேர்தலில் எடப்பாடியார் வெற்றி பெற்று முதலமைச்சர் ஆவார் 210 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்று அதிமுக ஆட்சி அமைக்கும் மேலும் திருப்பூரை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் இந்திய துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்திருப்பது நமக்குப் பெருமை அனைத்து கட்சிகளும் அவரை ஆதரிக்க வேண்டும் இவ்வாறு அவர் பேசினார் 

இந்த கூட்டத்தில் கட்சியின் இணைச்செயலாளர் சங்கீதா சந்திரசேகர் ஜெயலலிதா பேரவை மாநில துணை செயலாளர் முத்து வெங்கடேஸ்வரன் திருப்பூர் மாநகராட்சி எதிர்க்கட்சி  தலைவர் அன்பகம் திருப்பதி கொறடா என் மாரியப்பன் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் அட்லஸ் லோகநாதன் வர்த்தக அணி செயலாளர் எஸ் பி என் பழனிச்சாமி அண்ணா தொழிற்சங்க செயலாளர் கண்ணபிரான் இளைஞரணி செயலாளர் வேல் குமார் சாமிநாதன் மாநில மாவட்ட மாநகர நகர ஒன்றிய பகுதி கிளை நிர்வாகிகள் சார்பு அணி நிர்வாகிகள் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர்  திரளாக கலந்து கொண்டனர்

மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad