தமிழியக்கம் நீலகிரி மாவட்டம் திருக்குறள் நன்னெறிப் பயிற்சி.
உதகமண்டலம் நகராட்சி காந்தல் பகுதியில் அமைந்தள்ள நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தில் தமிழியக்கம் சார்பாக மாணவர்களுக்கு திருக்குறள் நன்னெறி பயிற்சி வகுப்பு நடைபெற்றது. நூலகர் அசீனா அனைவரையும் வரவேற்றார். பயிற்சியாளர்கள் புலவர் இர.நாகராஜ், கு. விஜயலட்சுமி திருக்குறள் நன்னெறி குறித்தான செய்திகளை விளக்கிக் கூறினர். இந்தப் பயிற்சி வகுப்பில் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துக் கொண்டனர். கலை ஆசிரியர் முனீஸ்வரி நன்றி கூறினார்.
வாரந்தோறும் சனிக் கிழமைகளில் காலை 11:00 மணி அளவில் அறிவுசார் மையத்தில் தொடர்ந்துப் பயிற்சியானது நடைபெறும்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக