நீலகிரி மாவட்டம் தமிழ் வளர்ச்சித் துறை திருக்குறள் திருப்பணிகள் நுண்பயிற்சி வகுப்பு ஆலோசனைக் கூட்டம்
நீலகிரி மாவட்டம் தமிழ் வளர்ச்சித் துறை சார்பாக திருக்குறள் திருப்பணிகள் நுண் பயிற்சி வகுப்பு மற்றும் திருக்குறள் குறித்தான ஆலோசனை கூட்டம் உதகை மலைச்சாரல் 526 கவியரங்கில் நடைபெற்றது. செயலர் ம.பிரபு அனைவரையும் வரவேற்றார். கே.எம் பெள்ளி தலைமை வகித்தார். இந்நிகழ்வில் திருக்குறள் பரப்புரை குறித்தும், திருக்குறள் கருத்துகளை மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் கொண்டுச் சேர்த்தல் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. சரவணராஜன், பஞ்சாபகேசன், கிருஷ்ணராஜ், ஜனார்தனன், நீலமலை ஜே.பி, சுந்தரபாண்டியன் ஆகியோர் கலந்துக் கொண்டு ஆலோசனை வழங்கினர். ரமேஷ் நன்றி கூறினார். புலவர் இர.நாகராஜ் நிகழ்ச்சியைத் ஒருங்கிணைத்து தொகுத்து வழங்கினார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக