திருப்பூர் மாவட்டத்தில் ஆடிப்பெருக்கு விழா கோலாகல கொண்டாட்டம் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 5 ஆகஸ்ட், 2025

திருப்பூர் மாவட்டத்தில் ஆடிப்பெருக்கு விழா கோலாகல கொண்டாட்டம்



ஆடிப்பெருக்கு விழா திருப்பூர் மாவட்டத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.அதையொட்டி அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில்,சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோவில்,வெள்ளகோவில் வீரக்குமாரசாமி கோவில்,உடுமலை மாரியம்மன் கோவில், தாராபுரம் அகஸ்தீஸ்வரர் கோவில் ,குண்டடம் வடுகநாதர் கோவில் உட்பட

அனைத்து கோவில்களிலும் காலை முதலே பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.


தாராபுரம் பகுதியில் பெண்கள் முளைப்பாரி வைத்து சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அங்கிருந்து முளைப்பாரியை எடுத்துக்கொண்டு ஊர்வலமாக நகரின் முக்கிய வீதிகள் வழியாக அமராவதி ஆற்றுக்கு வந்தடைந்தனர்.


ஆற்றில் முளைப்பாரியை விட்டுவிட்டு விவசாயம் செழிக்க வேண்டும் என்று அகஸ்தீஸ்வரரை வழிபட்டனர். புதுமண தம்பதிகள் அமராவதி ஆறு அகஸ்தீஸ்வரர் கோவில் படித்துறை அருகே மணலால் கன்னிமார் சாமி பிடித்து சாமிக்கு பூஜைகள் செய்து வழிபட்டனர். இதைத் தொடர்ந்து புதுமண தம்பதிகள் புதிய தாலி கயிறுகள் கட்டிக் கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad