திருப்பத்தூர் அருகே சாலையில் நாற்று நட்டு நூதன முறையில் போராடிய பொது மக்கள் !
திருப்பத்தூர் , செப் 2 -
திருப்பத்தூர் மாவட்டம் ஜோன்றம் பள்ளி பகுதியில் ஏரிக்கரை சாலையை அமை த்து தரக்கோரி குண்டும் குழியும் தண் ணீர் தேங்கிய ரோட்டில் அப்பகுதி மக்கள் நெற்பயிர் நாத்து நட்வு செய்து நூதன முறையில் போராட்டம் !
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ஒன்றியம் ஜோன்றம்பள்ளி பகுதியில் இரண்டு மாதங்களுக்கு முன்பாக ஏரிக் கரையின் வழியாக சாலை அமைத்து தரப்படும் என போடப்பட்ட ரோட்டில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதன் காரணமாக அங்கு பள்ளிக்குச் செல்லும் மாணவ மாணவிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகிறார்கள் என தெரிவிக்கிறார்கள் மேலும் ஜோன்றம் பள்ளி பகுதியில் 150 மேற்பட்ட குடும்பங் கள் வசித்து வருகிறார்கள். மாணவ மாணவிகள் மேல் நிலைப் பள்ளிக்கு செல்ல வேண்டுமென்றால் கொடுமாம் பள்ளி பகுதிக்கு செல்ல வேண்டும் அதற்கு இச்சாலையை தான் பயன்படுத்த வேண்டும் ஆனால் இரண்டு மாதங்களு க்கு முன்பாக சாலை அமைக்கும் பணி நடைபெற்று இது வரையிலும் செயல் படுத்த வில்லை என தெரிவிக்கிறார்கள்
மேலும் அவ்வழியில் செல்லும் பொழுது அருகாமையில் பெரிய ஏரி ஒன்று உள் ளது குண்டும் குழியுமாக தண்ணீர் தேங் கிய சாலையில் செல்லும் முதியோர்க ளும் பெண்கள் குழந்தைகள் என அனை வரும் மிகவும் ஆபத்தான நிலையில் சென்று வருகிறார்கள் என தெரிவிக்கி றார்கள் இச்சாலையில் டெண்டர் எடுத்த வர்களை வரச் சொல்லுங்கள் அவர்கள் இந்த வழியாக சென்று பார்க்கட்டும் அப்பொழுதுதான் எங்களுடைய கஷ்டம் என்னவென்று அவர்களுக்கு தெரியும் என அப்பகுதி மக்கள் வேதனையுடன் கூறி வருகிறார்கள் எனவே உடனடியாக குண்டும் குழியுமாக தண்ணீர் தேங்கிய நிலையில் உள்ள சாலையை சரி செய்து தார் சாலை அமைத்து தர வேண்டுமென நெல் பயிரை நட்டு நூதன முறையில் போராட்டத்தை நடத்தியதால் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
திருப்பத்தூர் தாலுகா செய்தியாளர்
மோ.அண்ணாமலை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக