திருப்பூர் மாநகர கழிவு களால் சுகாதாரக் கேடு போராடும் பொதுமக்கள் கைது திருப்பூர் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 19 செப்டம்பர், 2025

திருப்பூர் மாநகர கழிவு களால் சுகாதாரக் கேடு போராடும் பொதுமக்கள் கைது திருப்பூர்


 திருப்பூர் மாநகராட்சியில் உபயோகமில்லாத பாறைக்குழியில் குப்பை கொட்டுவது சம்பந்தமாக சுகாதாரக் கேடு ஏற்படுத்துவதாக முதலி பாளையம் பகுதி மக்கள் கூறுகின்றனர் 

இது பற்றி அவர்கள் தெரிவித்ததாவது

திருப்பூர் மாவட்டம் காங்கயம் ரோடு முதலிபாளையம் பிரிவு பகுதியில்  கடந்த ஒரு மாதமாக  பயன்பாட்டில் இல்லாத பாறைகுழியில் குப்பை கொட்டி வருகின்றனர். சில வருடங்களுக்கு முன்பு இதே போல குப்பை கொட்டப்பட்டு வந்த போது துர்நாற்றம் வீசுவது, சமையல் அறை வரை ஈக்கள் மொய் ப்பது, தெரு நாய்கள் தொல்லைகள் அதிகரித்தது. இது மட்டும் இல்லாமல் அந்த குப்பைகளுக்கு அடிக்கடி தீ வைக்கப்பட்டு இந்த சுற்று வட்டார பகுதியில் உள்ள குழந்தைகள் பெரியவர்கள் என பல்லாயிரகணக்கானோர் பல்வேறு நோய் தொற்றுகளால்(சுவாச கோளாறு, நுரையீரல் நோய் தொற்று, காய்ச்சல், இருதய பாதிப்பு என இன்னும் பல...) பாதிக்கப்பட்டோம். தரம் பிரிக்கப்படாமல் கொட்டப்படும் இந்த குப்பைகளால் பல கிலோமீட்டர் சுற்று வட்டார பகுதியில் உள்ள விவசாய பூமிகள் பெரிதும் பாதிக்கப்பட்டது. விவசாய கிணறுகள், ஆழ்துளை கிணறுகளில் தண்ணீரின் தரம் பெரிதும் பாதிக்கப்பட்டு இதனால் ஆடு, மாடுகளுக்கு நோய் தொற்று ஏற்பட்டு விவசாயமும் மிகப்பெரிய பாதிப்பை சந்திக்கிறது. கடந்த ஐந்து நாட்களாக தினமும் சரசரியாக நூற்றுக்கணக்கான லாரிகளில்  குப்பைகளை கொட்டி வருகின்றனர். 

காவல் துறை பாதுகாப்போடு இன்று வரை திடக்கழிவு மேலாண்மையை முறையாக அமல்படுத்தாமல் முறைக்கேடாக பாறைக்குழியில் கொட்டி நிலம்,நீர் காற்று என அனைத்தும் கெடுத்துவிட்டனர். ஆரம்பம் முதலே கருப்பு கொடி போராட்டம், ஆர்பாட்டம்,சாலை மறியல், காத்திருப்பு போராட்டம் என எதை முன்னெடுத்தாலும் காவல் துறை ஒடுக்குமுறையுடன் மாநகராட்சி நிர்வாகம் செயல்பட்டு மக்களை பழிவாங்கும் செயலில் ஈடுபடுகிறது.

மேலும் கடந்த திங்கள் கிழமை அன்று மாவட்ட ஆட்சியர்,மாநகராட்சி ஆணையர் முன்னிலையில் கடந்த (புதன்) மாலை/5 மணிக்கு பேச்சுவார்த்தைக்கு  ஏற்பாடு செய்தார் மாநகர உதவி காவல் ஆணையர் 

அதன் பேரில் நேற்று சுமார் 60 பேர் மாவட்ட ஆட்சியர் அலுவகம் சென்றோம். ஆனால் மாவட்ட ஆட்சியர் பேச மறுத்துவிட்டு ,மாநகராட்சி ஆணையரை போய் சந்திக்க சொல்லிவிட்டார்.

அரசு தரப்பு அதிகாரிகளையும் பொதுமக்களையும் ஒன்றாக சந்திக்க ஏற்பாடு செய்யால் காவல்துறை மூலம் கைது செய்து பெரிச்சிபாளையம் சிலம்பு மஹாலில் வைத்தனர்.

பேச்சு வார்த்தையில் மாறுபட்டு பேசிய காவல்துறை, மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆனையரை கண்டித்தும், பாறைக்குழியில் குப்பை கொட்டுவதை நிறுத்த கோரியும் உண்ணாவிரதம் செய்து வருகிறோம்

இவ்வாறு கைதான பொதுமக்கள் கூறினர்.

மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad