தாராபுரம் அருகே தலைமறைவில் இருந்த குற்றவாளி கைது செம்புக் கம்பி திருட்டு வழக்கு – 7 ஆண்டுகள் புலனாய்வில் தவித்த போலீசாரின் வலை
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே மாந்தியாபுரம் பகுதியில், விவசாயிகளின் மின் மோட்டார் இணைப்புகளில் இருந்த செம்புக் கம்பிகளை துண்டித்து திருடிய வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த குற்றவாளி சிக்கியுள்ளார்.
தர்மபுரி பென்னகரத்தை சேர்ந்த ராமன் (33) எனப்படும் ‘சப்பாத்தி ராமன்’, 2016-ஆம் ஆண்டு நடந்த திருட்டு வழக்கில் தண்டனை பெற்று, ஜாமினில் வெளியேறினார். அதன் பின் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் ஏழு வருடமாக போலீசாரை தவிர்த்து தலைமறைவாக வாழ்ந்து வந்தார்.
இந்நிலையில், தாராபுரம் குற்றப்பிரிவு ஆய்வாளர் சரவணன் தலைமையில், கலைச்செல்வன், வெங்கடேஷ் ஆகியோர் அடங்கிய போலீஸ் குழு தர்மபுரி மாவட்டம் அரூர் பகுதியில் சப்பாத்தி ராமனை கைதுசெய்தது.
அவர்மீது சேலம், தர்மபுரி மாவட்டங்களிலும் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும் தாராபுரம் பகுதியில் மட்டும் 10-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகளில் தொடர்புடையவர் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சப்பாத்தி ராமனை தாராபுரம் குற்றவியல் நீதிபதி உமாமகேஸ்வரி முன் ஆஜர்படுத்திய நிலையில், 15 நாள் காவல் உத்தரவிட்டு, தாராபுரம் கிளை சிறையில் அடைத்தனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக