தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி விவசாய பிரிவு மாநில பொதுச் செயலாளர் ஆர்.எஸ்.ராஜன் அறிக்கை. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 30 செப்டம்பர், 2025

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி விவசாய பிரிவு மாநில பொதுச் செயலாளர் ஆர்.எஸ்.ராஜன் அறிக்கை.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி விவசாய பிரிவு மாநில பொதுச் செயலாளர் ஆர்.எஸ்.ராஜன் விடுத்துள்ள அறிக்கை

சமிபத்தில் கரூரில் நடைபெற்ற நடிகர் விஜயின் அரசியல் கட்சியான தமிழக வெற்றி கழகம் நடத்திய பொது கூட்டம் பொது மக்கள் செல்லும் சாலையில் நடைபெற்றதன் விளைவாக ஏதும் அறியாத அப்பாவி பொது மக்கள் பலர் உயிர் இழந்தனர். 

எனவே எந்த ஒரு அரசியல் கட்சி பொது கூட்டங்களுக்கும் விருப்பு வெருப்பின்றி வாகன போக்குவரத்து உள்ள எந்த சாலைகளிலும் இனி வரும் காலங்களில் பொது மக்கள் நலன் கருதி தமிழக அரசு எந்த ஒரு அரசியல் கட்சியினருக்கும் பொது கூட்டம் நடத்த அனுமதி வழங்கக்கூடாது.

அதற்கு மாற்றாக அரசியல் கட்சியினர் பொது கூட்டம் நடத்த மைதானங்கள் மற்றும் போக்குவரத்து இடையூறுகள் இல்லாத பெரிய இடங்களில் மட்டுமே அனுமதி வழங்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் விவசாய பிரிவு சார்பில் கேட்டுக்கொண்டார் 

தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad