ராணிப்பேட்டையில் வேலூர் சரக காவல் துறை துணைத்தலைவர் தலைமையில் குற்ற கலந்தாய்வு கூட்டம்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 23 அக்டோபர், 2025

ராணிப்பேட்டையில் வேலூர் சரக காவல் துறை துணைத்தலைவர் தலைமையில் குற்ற கலந்தாய்வு கூட்டம்!

ராணிப்பேட்டையில் வேலூர் சரக காவல் துறை துணைத்தலைவர் தலைமையில் குற்ற கலந்தாய்வு கூட்டம்!
ராணிப்பேட்டை , அக் 23 -

ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண் காணிப்பாளர் அலுவலகத்தில் வேலூர் சரக காவல்துறை துணைத்தலைவர் 
Dr.ஜி.தர்மராஜன் தலைமையில் ராணிப் பேட்டை மாவட்ட காவல் கண்காணிப் பாளர் அய்மன் ஜமால், வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில் வாகணன் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சியாமளா தேவி, 
திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர்,ஆகியோர் முன்னிலையில் குற்றக் கலந்தாய்வு
கூட்டம் நடைபெற்றது .
இக்கலந்தாய்வு கூட்டத்தில் மாவட்டத்தில் முக்கிய வழக்குகளான கொலை, அடிதடி மற்றும் திருட்டு வழக்குகள் குறித்து மேற்கொள்ளப்பட வேண்டிய தொடர் நடவடிக்கைகள் குறித்தும், ரவுடிகள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கை குறித்தும், நீதிமன்ற நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும், பிடிகட்டளையில் நிலுவையில் உள்ள வழக்குகளில் எதிரிகளை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்வது குறித்தும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக குற்ற வழக்குகளில் (POCSO) உள்ள எதிரிகளு க்கு தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்றும் கள்ளத்தனமாக மது பான விற் பனையில் ஈடுபடும் நபர்கள் மற்றும்  அண்டை மாநிலங்களிலிருந்து   மதுபானங்களை கடத்தி வருவோர் மற்றும் விற்பனையில் ஈடுபடுவோரை கண்டறிந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அறிவுரை வழங்கினார்.மாவட்டத்தில் கஞ்சா, குட்கா மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையை முற்றிலும் ஒழிக்கும் வகையில் தீவிர தணிக்கை யில் ஈடுபட வேண்டும் எனவும், சட்ட விரோதமாக மணல் கடத்தலில் ஈடுபடும் நபர்கள், பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடும் நபர்கள் மற்றும் lottery விற் பனையில் ஈடுபடும் நபர்களை கண் டறிந்து அவர்கள் மீது உரிய சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கூறினார்.மேலும் இக்கூட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் துணை காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் திரளாக கலந்து கொண்டனர்  .

மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ் செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு 9150223444.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad