அக்டோபர் 11 ஆம் தேதி முதல் நடைபெற்ற இந்த போட்டியில் 36 அணியினர் பங்கு பெற்றனர். இதில் முதல் பரிசான ரூபாய் 20000 மற்றும் வெற்றி கோப்பையை மேல ஆத்தூர் அணியினர் பெற்றுக்கொண்டனர். இரண்டாம் பரிசான ரூபாய் 15000 நாலுமூலை கிணறு அணியினரும், மூன்றாவது பரிசான ரூபாய் 10000 பழையகாயல் அணியினரும், நான்காவது பரிசான ரூபாய் 5000 வெற்றி நமதே அணியினர் பெற்று கொண்டனர்.
நிறைவு நாள் விழாவில் சென்னை ஜெயச்சந்திரன் டெக்ஸ்டைல் அதிபர் சரவண சந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசு வழங்கினர்.
இந்நிகழ்வின் போது நாசரேத் காவல் நிலைய தலைமை காவலர் வேல்பாண்டியன், வணிகர் சங்க மாவட்ட செயலாளர் கண்ணன், வணிகர் சங்க மாவட்ட பொறுப்பாளர் பாஸ்கர், நாலுமாவடி மெர்க்கன்டைல் வங்கி மேலாளர், அங்கமங்கலம் தொழிலதிபர்கள் லிங்கதுரை, முனிஷ், ஜோசப், ஜெபசீலன் மற்றும் மகேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை வெற்றி நமதே அணியினர் சிறப்பாக செய்து இருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக