ஊசூர் அரசு பள்ளி மாணவர்களக்கு விபத்தில்லா தீபாவளி மகிழ்ச்சியான தீபாவளி செயல்விளக்கம்!
வேலூர் , அக் 17 -
வேலூர் மாவட்டம் ஊசூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று வேலூர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலையத் தின் சார்பில் தீ விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு செயல்விளக்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் கே.சீனிவாசன் தலைமை தாங்கினார். நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் முனைவர் சி.சுதாகர் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக ஜூனியர் ரெட் கிராஸ் அமைப்பின் முன்னாள் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் செ. நா.ஜனார்த்தனன் கலந்து கொண்டு பேசினார்
வேலூர் தீயணைப்பு நிலையத்தின் வீரர்கள் ஜெ.அரிஓம், பி.அஜித்குமார் எ.பிரகாஷ், எஸ்.சுபாஷ் ஆகியோர் பட்டாசுகளை வெடித்தும் பூ மத்தாப்பு பூத்தொட்டி கொளுத்தியும் விழிப்புணர் வினை செய்து காண்பித்தனர் தீ விபத் தில்லா தீபாவளி கொண்டாடுவோம். பட்டாசு வெடிக்கும் போது செய்ய வேண்டியவை செய்யக்கூடாதவை என்ற துண்டு அறிக்கையினை மாணவர்கள் அனைவருக்கும் வழங்கினர்.
பட்டாசு களை பெரியவர் முன்னிலையில் வெடிக்க வேண்டும் பட்டாசு வெடிப்பதற்கு முன் இரண்டு வாலி தண்ணீர் நிறைத்து வைக்க வேண்டும் பட்டாசுகளை வெடிக்க நீண்ட குழல் வக்திகளை பயன்படுத்த வேண்டும் தீ பிடிக்காத இருக்கமான பருத்தி ஆடைகளை அணிந்து பட்டாசு வெடிக்க வேண்டும் காலில் செருப்பு அணிந்து கொண்டு பட்டாசு வெடிக்க வேண்டும் என்பது போன்ற விழிப்புணர் வுகளை வழங்கினர்.ஆசிரியர்கள் கே.குணசேகரன், ஓம்பிரகாஷ், எம்.சிவகாமி, எ.அருள், ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.
முடிவில் ஆசிரியர் ஆர். சரவணன் நன்றி கூறினார்
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக