குடியாத்தத்தில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறிய 8 லட்சம் மோசடி கிராம உதவியாளர் பெண் கைது !
குடியாத்தம் , நவ.25 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி 8 லட்சம் மோசடி செங்கல்பட்டு முன்னாள் கிராம உதவியாளர் பெண் கைது செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழிக் குன்றம் பகுதியை சார்ந்த சேகர் மனைவி சுமதி (வயது 43) 2012ம் ஆண்டு கருணை அடிப்படையில் வருவாய் துறையில் கிராம உதவியாளராக பணிக்கு சேர்ந்து ள்ளார். இவர் கடந்த சில ஆண்டுகளாக அரசு வேலை வாங்கித் தருவதாக தமிழ்நாடு முழுவதும் பல்வேறு நபர்களி டம் பல லட்சம் ரூபாய் பெற்றுள்ளார்
இதுகுறித்து மக்கள் கொடுத்த புகாரின் பேரில் உறுதி செய்யப்பட்டு சுமதியை வருவாய் துறை உயர் அதிகாரிகள் தற்காலிக பணி இடை நீக்கம் செய்யப் பட்டுள்ளனர். அதன்படி வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கல்லூர் கிராமத் தைச் சேர்ந்த வெங்கடேஷ் , சந்தோஷ், இவர்கள் கடந்த 2017 ஆம் ஆண்டு தனியார் செல்போன் நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர் அப்போது சுமதி உடன் பழக்கம் ஏற்பட்டு தான் அரசு வேலை வாங்கித் தருவதாககூறியுள்ளார் அதன்படி 2 பேரும் தலா 4 லட்சம் என மொத்தம் 8 லட்சம் கொடுத்துள்ளனர். பணத்தைப் பெற்று கொண்ட சுமதி இரண்டு பேருக்கும் வருவாய்த்துறையில் போலி பணி நியமன ஆணை மற்றும் அடையாள அட்டை ஆகியவை செல்போ னில் அனுப்பி உள்ளனர். அப்பொழுது தான் கூறும் போது செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வரவேண்டும் என தெரிவித்துள்ளனர். இதில் சந்தேகம் அடைந்த குடியாத்தம் பகுதியை சேர்ந்த வெங்கடேஷ், சந்தோஷ் ஆகியோர் இது குறித்து உள்ளூர் உள்ள அரசு அதிகாரி களிடம் விசாரணை செய்த போது இவை போலியான ஆணை என தெரியவந்துள் ளது இது குறித்து குடியாத்தம் டவுன் போலீசில் புகார் அளித்திருந்தனர் அதன் படி . குடியாத்தம் நகர ஆய்வாளர் ருக்மாங்கதன் உதவி ஆய்வாளர் ஜெயந்தி மற்றும் போலீசார்செங்கல்பட்டு இன்று சுமதியை கைது செய்து குடியாத் தம் அழைத்து வந்தனர்போலீசார் சுமதி மீது வழக்குப்பதிந்து நேற்று இரவு கைது செய்து வேலூர் மத்திய பெண்கள் சிறை யில் அடைத்தனர்
குடியாத்தம் தாலுக்கா
செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக