திருப்பத்தூர் அருகே இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய வனத்துறை இடதிற்கு எடுத்து சென்றதால் பரபரப்பு!
திருப்பத்தூர் , நவ 4 -
திருப்பத்தூர் மாவட்டம் அருகே இறந்த வரின் உடலை அடக்கம் செய்ய வனத் துறை இடதிற்கு எடுத்து சென்றதால் பரபரப்பு!. சுடுகாட்டிற்கு புதிய இடம் ஒதுக்கி தர தாசில்தார் உத்தரவாதம் அளித்ததால் மாற்று இடத்தில் தகனம் செய்த மக்கள் திருப்பத்தூர் மாவட்டம், கதிரிமங்கலம் ஊராட்சி, ராஜா கவுண்டர் வட்டம், கள்ளு முனிசாமி வட்டம், அலங் கார மங்கலம் உள்ளிட்ட சிறு சிறு கிராமங்களை சேர்ந்த மக்கள் கள்ளு முனிசாமி வட்டம் அருகில் கால காலமாக இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்து வந்துள்ளனர். கடந்த 2 வருடங்க ளுக்கு முன்பு அரசுக்கு சொந்தமான இடம் என்பதால் மாவட்ட வனத்துறை அலுவலர் களுக்கு குடியிருப்பு மற்றும் அலுவலகம் கட்டி விட்ட நிலையில் அந்த இடத்தில் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய முடியாமல் அவ்வபோது அவதி அடைந்து உள்ளனர். இந்நிலையில் நேற்று ராஜா கவுண்டர் வட்டம் பகுதியைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர் உடல்நிலை குறைவால் இறந்துள்ளார். அவரின் உடலை அடக்கம் செய்ய ராஜா கவுண்டர் வட்டம் பகுதி யைச் சேர்ந்த மக்கள் தற்போது வனத் துறை அலுவலக கட்டிடம் உள்ள பகுதிக்கு உடலை எடுத்து சென்றுள்ளனர். இதனை அறிந்த வனத்துறையினர் அங்கு புதைக்க கூடாது என்று எதிர்ப்பு தெரி வித்த நிலையில் போலிசார் மற்றும் வனத்துறையினர் குவிந்த நிலையில் அப்பகுதி பரபரப்பு ஏற்படாது. பின்னர் அப்பகுதி மக்கள் ஐயா எங்களுக்கு சுடுகாட்டிற்கு இடம் வேண்டும் நீங்கள் மாற்றிய இடம் கொடுக்கும் வரையில் நாங்கள் இதன் ஓரமாக அரசு நிலங்களை பயன்படுத்திக் கொள்கிறோம் என்று கோரிக்கை வைத்த நிலையில் பரபரப்பு தணிந்த நிலையில் வட்டாட்சியர் நவநீதம் மாற்று இடம் உங்களுக்கு ஏற்பாடு செய்து தருகிறோம் என்று உறுதி கூறி இடங் களை ஆய்வு செய்ய சென்றதால் பெரும் பரபரப்பு தவிர்க்கப்பட்டது. அப்பகுதி மக்கள் எங்களுக்கு நிரந்தரமான சுடுகாட்டை ஏற்படுத்தி கொடுங்கள் என்று கோரிக்கை வைத்து உள்ளனர்.
செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக