திருப்பூர் தெற்கு மாநகர திமுக செயலாளர் தலைமையில் SIR விழிப்புணர்வு பிரச்சாரம் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 24 நவம்பர், 2025

திருப்பூர் தெற்கு மாநகர திமுக செயலாளர் தலைமையில் SIR விழிப்புணர்வு பிரச்சாரம்


திருப்பூர் வாக்காளர் பெருமக்களை விழிப்புணர்வு படுத்தும் வகையில்   திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகை முன்பு திருப்பூர் தெற்கு  திமுக செயலாளர் டி.கே.டி.மு.நாகராசன் அவர்கள் நடை பயிற்சி நண்பர்களுடன் இணைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார் உங்கள் . வாக்கு உறுதி செய்து கொள்ளுங்கள்....                                                                                                  நீங்கள் கொடுத்த SIR படிவம், BLO (பூத் நிலை அலுவலர்) அவரது மொபைல் ஆப்-பில் (Mobile app) சப்மிட் (submit) செய்துவிட்டாரா என்று பார்க்க, இந்த இணையதளத்திற்குச் செல்லுங்கள்: voters.eci.gov.in/login

செய்யுங்கள் அங்கு "Fill Enumeration Form" பகுதிக்கு செல்லுங்கள்.

  உங்கள் மாநிலத்தை தேர்ந்தெடுங்கள்.

 உங்கள் வாக்காளர் அடையாள அட்டை எண்ணை (Epic number) அங்கே டைப் (type) செய்யுங்கள்.

நீங்கள் கொடுத்த விவரம் சமர்ப்பிக்கப்பட்டு (submitted) இருந்தால், "Submitted" என்று காட்டும்.

அப்படி வராமல், தொடர்ந்து "ஆதார் படிவத்தை சப்மிட் செய்யவும்" என்று காட்டினால், BLO உங்கள் படிவத்தை இன்னும் சப்மிட் செய்யவில்லை என்று அர்த்தம்.

உடனே உங்கள் BLO-வைத் தொடர்புகொண்டு உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். பொதுமக்களுக்கு இந்த விழிப்புணர்வு செய்தி பயனுள்ளதாக இருக்கும் என்று  திருப்பூர் தெற்கு மாநகர திமுக செயலாளர் டி. கே.டி.மு.நாகராசன் அவர்கள் தெரிவித்துள்ளார்

மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad