திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள சுற்றுலாத்தலமான அமராவதி அணை பகுதிக்கு நாள் தோறும் ஆயிரக்கணக்கானோர் வருகை புரிகின்றனர்.
இந்நிலையில் இங்கு சுற்றுச் சூழல் விழிப்புணர்வு முகாம் நேற்று நடைபெற்றது.
இந்த முகாமில் அமராவதி அணை பூங்காவில் இருந்து 140 கிலோ பிளாஸ்டிக் குப்பைகள் எடுக்கப் பட்டது.
மாவட்ட சுற்றுலா அலுவலர் அரவிந்த் குமார் தலைமை வகித்து சுற்றுச்சூழல் குறித்து பேசினார்.
தமிழ்நாடு அரசு சுற்றுலாத் துறை, நீர்வளத்துறை, ஊரக வளர்ச்சி துறை, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் , உடுமலை சுற்றுச்சூழல் சங்கம், ரோட்டரி சங்கம், அரிமா சங்கம் மற்றும் பிரியா நர்சிங் கல்லூரி ஆகியவை இணைந்து சிறப்பு தூய்மை பணி முகாம் நடத்தப்பட்டது.
மாவட்ட சுற்றுலா மேம்பாட்டு குழு சுற்றுலா ஆர்வலர்கள் நாகராஜ் ,சத்யம் பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக